வானில் தோன்றிய ‘சூப்பர் மூன்’ - அழகை ரசித்த மக்கள் மகிழ்ச்சி!

world
By Nandhini May 27, 2021 06:28 AM GMT
Nandhini

Nandhini

in உலகம்
Report

2021ம் ஆண்டு முதல் சந்திர கிரகணமான நேற்று வானில் தோன்றியது. இந்த வானில் தோன்றும் இந்த சந்திர கிரகணத்தை ‘சூப்பர் மூன் அல்லது பிளட் மூன்’ என்று அழைக்கப்படும் இந்த ரத்த நிலாவை, நியூசிலாந்து மக்கள் கண்டு ரசித்து மகிழ்ந்தனர்.

சூரியனுக்கும், நிலவுக்கும் இடையே ஒரே நேர்கோட்டில் பூமி வரும் போது, சந்திர கிரகணம் ஏற்படுகிறது. இதனால், சூரிய ஒளி நிலவில் படுவதை பூமி மறைத்து விடும்.

பூமியின் நிழல் தான், நிலவில் படும். அப்போது, பூமி - நிலவு இடையேயான சராசரி தொலைவானது 3.84 லட்சம் கி.மீ.,யை விட குறைவாக இருக்கும். அப்போது, 'சூப்பர் மூன்' தோன்றும். அப்போது நிலவு 30 சதவீதம் கூடுதல் ஒளியுடனும் மின்னும்.

சூப்பர் மூன் ஏற்படும் போது, பூமிக்கு அருகில் நிலவு வருவதால், சூரிய ஒளி பூமியின் காற்று மண்டலத்தில் பட்டுச் சிதறுகிறது. இதனால், அலை நீளமுள்ள சிவப்பு நிறம், நிலவின் மேற்பரப்பில் பட்டு பிரதிபலிக்கும். அதனால், 'ஆரஞ்சு' முதல் ரத்த சிவப்பு நிறத்தில் நிலா தெரியும். இதை 'ரத்த நிலா' என்று சொல்லப்படுகிறது.

இந்த நிகழ்வு, நியூசிலாந்து நாட்டில் நேற்று தோன்றியது. 15 நிமிடங்கள் தெரிந்த இந்த நிலவை மக்கள் கண்டு ரசித்தனர். நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, பசிபிக் மற்றும் கிழக்கு ஆசிய நாடுகளில், நேற்று நள்ளிரவு இந்த ரத்த நிலவு தோன்றியது. வட அமெரிக்காவின் சில பகுதிகளில் மட்டும் அதிகாலை இக்காட்சியை காண முடிந்தது.

வானில் தோன்றிய ‘சூப்பர் மூன்’ - அழகை ரசித்த மக்கள் மகிழ்ச்சி! | World