உலகின் 'நம்பர் ஒன்' பணக்காரரானார் பெர்னார்டு அர்னால்ட்!
world
By Nandhini
உலக பெரும் பணக்காரர்கள் வரிசையில், முதல் இடத்தில் இருந்த 'அமேசான்' நிறுவனத்தை பின்னுக்கு தள்ளி பெர்னார்டு அர்னால்ட் முதல் இடத்தில் வந்துள்ளார்.
பிரெஞ்ச் ஆடம்பர குழுமமான எல்.வி.எம்.எச். நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக பெர்னார்டு அர்னால்ட் உள்ளார். இவரின் சொத்து மதிப்பு 'போர்ப்ஸ்' கணிப்பின்படி 13.61 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதனால், இவர் உலகின் 'நம்பர் ஒன்' பணக்காரர் என்ற இடத்தைப் பிடித்துள்ளார்.
அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ் சொத்து மதிப்பு தற்போது, 13.58 லட்சம் கோடி ரூபாயாக இருக்கிறது. நடப்பு ஆண்டில், அர்னால்ட் சொத்து மதிப்பு, 3.43 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
