செவ்வாய் கிரகத்தில் பறந்த ஹெலிகாப்டர் - நாசா விண்வெளி ஆய்வு மையம் சாதனை

world.
By Nandhini Apr 20, 2021 07:11 AM GMT
Nandhini

Nandhini

in உலகம்
Report

செவ்வாய் கிரகத்தில் ஹெலிகாப்டரை பறக்க விட்டு அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையம் வரலாற்றுச் சாதனை படைத்திருக்கிறது.

கடந்த ஆண்டு ஜூலை பெர்செவெரன்ஸ் ரோவர் விண்கலத்துடன் சிறிய வகை ஹெலிகாப்டர் ஒன்றை நாசா விண்வெளி ஆய்வு மையம் செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பி வைத்தது. இந்த ஹெலிகாப்டருக்கு ‘இன்ஜெனியூட்டி’ என்று பெயரிடப்பட்டிருந்தது.

செவ்வாய் கிரகத்தில் ஆய்வு மேற்கொள்ள இந்த ஹெலிகாப்டர் நாசா விஞ்ஞானிகள் பறக்க வைத்து ஆய்வு செய்தனர்.

அப்போது, வெற்றிகரமாக ஹெலிகாப்டர் 30 விநாடிகள் வரை பறந்தது. செவ்வாய் கிரகத்திலிருந்து 3 மீட்டர் உயரம் மட்டுமே இந்த ஹெலிகாப்டர் பறந்துள்ளது. வேறு ஒரு கிரகத்தில் ஹெலிகாப்டர் ஒன்றை பறக்க வைத்து நாசா விண்வெளி ஆய்வு மையம் வரலாற்றுச் சாதனை படைத்திருக்கிறது.

இது குறித்து நாசா விஞ்ஞானி ஃபாரா அலிபே கூறுகையில், பூமியில் நாம் ஹெலிகாப்டர், விமான உதவியுடன் பறக்கத் தொடங்கிவிட்டோம். ஆனால், வேறொரு கிரகத்தில் ஹெலிகாப்டரை பறக்க விட்டுள்ளது மிகவும் மெய்சிலிர்க்க வைத்துள்ளது. தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் பொறியியலின் கூட்டு முயற்சியில் இந்த வரலாற்றுச் சாதனை நிகழ்ந்துள்ளது என்றார்.