13 வயது சிறுவனை போலீசார் சுட்டுக்கொல்லும் வீடியோ வைரல் - நாடு முழுவதும் கொந்தளிப்பு

world
By Nandhini Apr 16, 2021 12:21 PM GMT
Nandhini

Nandhini

in உலகம்
Report

சிகாகோவில் உள்ள போலீசார் 13 வயது சிறுவனை ஈவு இரக்கமின்றி சுட்டுக் கொல்லும் வீடியோ வெளியானதால் நாடு முழுவதும் பெரும் பரப்பையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில் கருப்பினத்தவர்களை சேர்ந்த இளைஞர் கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில், 13 வயது சிறுவனை போலீசார் சுட்டுக்கொல்லும் வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இரண்டு வாரம் கழித்து சிகாகோ போலீசார் வெளியிட்டுள்ள இந்த வீடியோவில், ஒரு காரிலிருந்து அடையாளம் தெரியாத காவல் அதிகாரி இறங்கி வருகிறார். பின்னர் தோலேடா என்ற 13 வயது சிறுவனை மடக்க கைகளை உயர்த்த சொல்கிறார். பிறகு, அந்தச் சிறுவனை துப்பாக்கியால் சுடுகிறார். சில நொடிகளில் சிறுவன் கீழே சுருண்டு விழும் காட்சி பார்ப்பவர்கள் நெஞ்சை பதற வைக்கிறது.

13 வயது சிறுவனை போலீசார்  சுட்டுக்கொல்லும் வீடியோ வைரல் - நாடு முழுவதும் கொந்தளிப்பு | World

கடந்த ஞாயிற்றுக்கிழமை டான்ட் என்ற கருப்பின இளைஞரை போலீசார் சுட்டுக் கொன்ற சம்பவம் நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், மறுபடியும் போலீசாரின் அராஜகத்தை சுட்டிக்காட்டும் விதமாக இன்னொரு வீடியோ வெளியாகியுள்ளதால் கடும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.