‘’நல்லா சர்க்கஸ் பண்றே மேன் நீ’’-வைரலாகும் பிரியா பவானி சங்கரின் ஒர்கவுட் புகைப்படம்
நடிகை பிரியா பவானி சங்கர், ஒரு கயிற்றை பிடித்து தொங்கியபடி தன்னை தானே கலாய்த்து கொள்ளும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரை வந்து சிறந்த படங்களில் நடித்து. தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை சேர்த்து வைத்திருப்பவர் நடிகை பிரியா பவானி சங்கர்.
சமூக வலைத்தளங்களில் எப்போதும் பரபரப்பாக இருக்கும் பிரியா, ரசிகர்களின் கேள்விகளுக்கும் கலகலப்பாக பதிலளிப்பார்.
இந்த நிலையில் தற்போது ஜிம்மில் ஒர்க்கவுட் செய்யும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

மேலும் அந்த புகைப்படத்தில் கயிற்றில் அந்தரத்தில் தொங்கியபடி, கியூட் ஒன்றை உதிர்த்து‘ஹேய் நல்லா சர்க்கஸ் பண்றே மேன் நீ’ என தன்னை தானே கிண்டல் செய்து பதிவிட்டுள்ளார்.

அவரின் இந்த புகைப்படத்திற்கு ரசிகர்கள் பலரும் பலவிதமாக கிண்டல்செய்து பதிவிட்டு வருகின்றனர்.