ஊழியர்கள் பணிக்கு வராவிட்டால் சம்பளம் பிடிப்போம் - போக்குவரத்து கழகம் கடும் எச்சரிக்கை
Warning
workers
strike
எச்சரிக்கை
Transport-Corporation
ஊழியர்கள்
வேலைநிறுத்தம்
போக்குவரத்து-கழகம்
By Nandhini
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் இயங்கி வரும் தொழிற்சங்கங்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 28, 29ம் தேதி வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இதனையடுத்து, 28ம் தேதி மற்றும் 29ம் தேதி எந்தவிதமான விடுமுறையும் அறிக்கப்படாது என்றும், அன்று பணிக்கு ஊழியர்கள் வரவில்லை என்றால் சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என்றும், பணிக்கு வராத ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழ்நாடு போக்குவரத்துக் கழகம் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.