பணி நேரம் முடிந்த பின் ஆபிஸ் அழைப்புகளை நிராகரிக்கலாம் - புதிய சட்டம்
பணி நேரம் முடிந்தபின்னர் ஊழியர்கள் ஆபிஸ் அழைப்புகளை ஏற்கத் தேவையில்லை.
ஆபிஸ் அழைப்புகள்
ஐரோப்பிய நாடுகளில் கூடுதல் நேரம் வேலை வாங்குவதை தவிர்க்க புதிய சட்டங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளன. தொடர்ந்து, இந்த ஆண்டு தொடக்கத்தில் ஆஸ்திரேலியாவிலும் இந்த சட்டம் அமல்படுத்தப்பட்டது.
இந்நிலையில் இந்த சட்டம் வரும் 26ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. அதன்படி, வேலை நேரத்தை தவிர்த்து மற்ற நேரங்களில், அலுவலகத்திலிருந்தோ, முதலாளியிடமிருந்தோ அழைப்புகள் வந்தால் அதை நிராகரிக்கும் உரிமை தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
பணியின் போது செல்போன் பயன்படுத்த கூடாது - போலீசாருக்கு காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் அதிரடி உத்தரவு..!
புதிய சட்டம்
இப்படியான அழைப்புகளை தொழிலாளர்கள் எதிர்கொள்ளும்பட்சத்தில் அவர்கள் அலுவலகத்திடமோ, முதலாளியிடமோ இது குறித்து விளக்கம் கேட்கலாம். இந்த அழைப்புகள் தொடரும்பட்சத்தில், அவர்கள் நியாய வேலை ஆணையத்தில் வழக்கு தொடர்ந்து தங்களுக்கான உரிமையை பெற முடியும்.
மேலும், இந்த புதிய சட்டத்தை மீறும் நிறுவனங்கள் நாட்டின் தொழிலாளர் நல ஆணையத்தில் சார்பில் விதிக்கப்படும் 93,900 ஆஸ்திரேலிய டாலரை செலுத்த நேரிடும் என்றும் அரசு எச்சரித்துள்ளது.