வட மாநிலத்தொழிலாளர்களை பாஜக அழைத்துவருகின்றதா? - கொந்தளித்த எச்.ராஜா
வட மாநில தொழிலாளர்கள் அவர்களாகவே வருவதில்லை என பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.
எச்.ராஜா
பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர் , தமிழ்நாடு அமைதிப்பூங்காவாக இருப்பதாக கூறுவதே பித்தலாட்டம் ஏனென்றால் தமிழகத்தில் 19 ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர்களின் வீடுகளில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது, தமிழகத்தில் ஒரு நாளைக்கு ஒரு படுகொலை நடக்கிறது , போதைப்பொருள் பழக்கம் அதிகரித்துள்ளது.

நாங்கள் அழைத்து வருவதில்லை
நம் வேலைகள் தமிழர்கள் பார்ப்பதற்கு தயாராக இல்லாத சூழல் இருக்கையில் , அடுத்த 10 ஆண்டுகளில் தமிழகத்தில் தமிழ் பேசுவோரின் எண்ணிக்கை சிறுபானமையாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.
1969 காலகட்டத்தில் ஒரு தலைமுறையினருக்கு குடிப்பழக்கம் என்றால் என்னவென்பது தெரியாது , ஆனால் தமிழ்நாட்டில் கள்ளுக்டையை தொடங்கி தமிழர்களை குடிகாரர்களாக்கியது கருணாநிதி அவரது மகன் ஸ்டாலின் ஆட்சி மோசமான ஆட்சி அவர்களின் பித்தலாட்டங்கள் எடுபடாது.
மேலும், வட மாநில தொழிலாளர்கள் அவர்களாகவே வரவில்லை , இங்கே உள்ளவர்கள் தான் பயணசீட்டு பதிவு செய்து வட மாநில தொழிலாளர்களை அழைத்து வருகின்றனர். ஆனால் இங்கு சிலர் எங்களுக்கு ஓட்டு சேர்ப்பதற்காக இங்கே திரட்டி வருவதாக கூறுவதாக கூறினார்.