ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட கேஸ் கசிவால் 3 தொழிலாளர்கள் பலி

Accident Andhra
By mohanelango May 11, 2021 09:41 AM GMT
Report

ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே ரசாயன தொழிற்சாலையில் கேஸ் கசிவு ஏற்பட்டதால் 3 பேர் பலி. ஒருவர் கவலைக்கிடம்.

ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே தனியாருக்கு சொந்தமான ரசாயனத் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இதில் 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றும் நிலையில் இன்று தொழிற்சாலையில் உள்ள ரசாயன கேஸ் கசிவு ஏற்பட்டதால் அங்கு பணியாற்றி வந்த 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

மேலும் ஒருவர் கவலைக்கிடமான நிலையில் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இது குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் தொழிற்சாலையில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் ரசாயன கேஸ் கசிவு ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.