இதெல்லாம் பார்க்காமல் வேலை பாக்குறீங்களா? அப்போ கருவுறுதலில் பாதிப்பு வரும்!
வேலை செய்வதன் மூலம் ஏற்படும் பாதிப்புகள் குறித்து அவசியம் தெரிந்துக் கொள்ளுங்கள்.
நீண்ட நேர வேலை
வேலை நேரம் அதிகரிப்பு, இரவு நேர வேலைகள் மற்றும் வேலையை முடிப்பதற்கான காலக்கெடு ஆகியவை இளைஞர்களிடையே மன அழுத்தத்தை அதிகரிக்கின்றன.
இந்த மாதிரியான வேலைகளை செய்தால் நாளடைவில் ஆரோக்கியம் பாதிப்படையும். பல்வேறு நோய்கள் மற்றும் தொற்று நோய்களின் அபாயத்தை அதிகரிக்கும். தூக்கமின்மை, சோர்வு மற்றும் உடல் உபாதைகளுக்கு வழிவகுக்கும்.
நீண்ட நேரம் வேலை பார்ப்பது மாரடைப்பு, பக்கவாதம், உயர் ரத்த அழுத்தம் உள்ளிட்ட இதய நோய்களின் அபாயத்தை அதிகரிக்கும். டைப் 2 நீரிழிவு நோயை உருவாக்கும் அபாயத்தை இரட்டிப்பாக்குகிறது.
என்ன பாதிப்புகள்?
குறிப்பாக கருவுறாமை, கருச்சிதைவு மற்றும் பிறப்பு குறைபாடுகள் உள்ளிட்ட இனப்பெருக்க பிரச்சனைகளுக்கு அதிக வாய்ப்பிருப்பதாக ஆய்வுகள் கூறுகிறது.
நாள்பட்ட மன அழுத்தம் ஹார்மோன் சமநிலையை சீர்குலைக்கிறது. கருவுறுதல் மற்றும் கருத்தரிப்பில் பாதிப்பை உண்டாக்குகிறது. மேலும், தோல் சுருக்கங்கள், நரை முடி மற்றும் வயது தொடர்பான பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது.