அஞ்சறைப் பெட்டியில் மறைந்திருக்கும் ஆயுர்வேத மருந்துகள் - ட்ரை பண்ணி பாருங்க

healthtips ayurvedamasala
By Petchi Avudaiappan Feb 01, 2022 06:31 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in ஆரோக்கியம்
Report

ஆயுர்வேதத்தில், உணவுக் கட்டுப்பாடு என்பது மிகவும் முக்கியமானது. பாரம்பரிய இந்திய உணவுகளை தயாரிக்கும் போது  உணவு பதப்படுத்துதல், அதன் பாதுகாப்பு நுட்பங்கள் ஆகியவை  நிரூபிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக சமையல் அறையில் உள்ள அஞ்சறை பெட்டியில் இருக்கும் மசாலா பொருட்கள்சிறந்த ஆயிர்வேத மருந்துகளாக உள்ளது. சீரகம் அதன் அழற்சி எதிர்ப்பு பண்புகள் காரணமாக ஒரு செரிமானத்திற்கு பெரிதும் உதவுகிறது. இது வாயு பிரச்சனைகளை நீக்குவதோடு, மலமிளக்கியாகவும் செயல்படும்.

வயிற்றில் அதிக உஷ்ணம், அஜீரணம் பிரச்சனையினால் அவதிப்படுபவர்களுக்கு குளிர்ச்சியை தரும் தன்மை கொண்ட இந்த கொத்தமல்லி மசாலா, வீக்கம், வாயு பிரச்சனையை நீக்குவதோடு பசியையும் தூண்டுகிறது. 

வாசனைக்கு பெயர் போன பெருங்காயம் செரிமானத்தை மேம்படுத்துவதிலும், வயிற்று வலி, பிடிப்புகள் மற்றும் ஏப்பம் ஆகியவற்றைக் போக்க உதவுகிறது. இந்திய உணவுகளில் ஒரு மிக முக்கியமான அங்கமாக இருக்கும் மஞ்சள் ஆயுர்வேத வைத்தியங்களில் முக்கிய இடத்தில் உள்ளது. மஞ்சள் கசப்பு மற்றும் துவர்ப்புத்தன்மை கொண்டது. பித்த தோஷத்திற்கு நல்லது. இயற்கையாகவே நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

கார வகை, இனிப்பு வகை என அனைத்து இந்திய உணவுகளிலும் பயன்படுத்தப்படும் ஏலக்காய் செரிமானத்தை சீராக்கி கபம் மற்றும் வாதத்தை கட்டுப்படுத்துகிறது. இது வாய் புத்துணர்ச்சிக்காகவும் பயன்படுத்தப்படுகிறது. 

இஞ்சி வயிற்றிலுள்ள  நச்சுக்களை நீக்குவதுடன் செரிமான திறனை அதிகரிக்கிறது. உணவுக்கு முன் சில துண்டுகள் பச்சை இஞ்சியை எலுமிச்சை சாறு மற்றும் உப்பில் ஊறவைத்தி எடுத்துக் கொள்ளலாம். மேலும் இஞ்சியை தேநீரில் சேர்க்கும் போது, மோசமான சளி அல்லது சைனஸ் தொற்றுக்கு தீர்வாக அமைகிறது. 

இலவங்கப்பட்டை ஆன்டிவைரல் பண்புகளைக் கொண்டுள்ளதால் ஜலதோஷத்தை ஏற்படுத்தும் வைரஸை எதிர்த்துப் போராட உதவுகிறது.