காய்கறிகளை வெட்ட மரப்பலகை பயன்படுத்துறீங்களா? இது உயிருக்கே ஆபத்தாம் - கவனமா இருங்க!
காய்கறிகளை வெட்ட மரப்பலகை பயன்படுத்துவதில் உள்ள ஆபத்து குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
காய்கறி
இன்றைய வாழ்க்கை முறை நவீனமயமாகி வருகிறது. நம்மில் பெரும்பாலான தம்பதிகள் இருவரும் வேலை செல்கின்றனர். இதனால் வீடுகளில் சமைப்பது குறைவு தான். அப்படிச் சமைத்தால் காய்கறிகளை வெட்ட மரப்பலகை பயன்படுத்துவது அதிகம்.
முதலில் பிளாஸ்டிக் பலகையை தான் பயன் படுத்திக் கொண்டு இருந்தனர்.இப்படிச் செய்தால் பிளாஸ்டிக் துகள்கள் நமது உடலுக்குச் சென்று பல்வேறு விதமான ஆபத்தை ஏற்பட வாய்ப்பு உள்ளது . இதற்கு மாற்றாகக் காய்கறிகளை வெட்ட மரப்பலகை பயன்படுத்த ஆரம்பித்தனர்.
ஆனால் இதில் இன்னொரு அதிர்ச்சி காத்திருக்கிறது. இது குறித்து விரிவாகப் பார்க்கலாம்.நாம் காய்கறி வெட்டுவதற்குப் பயன்படுத்தும் மரப்பலகை பாதுகாப்பானது இல்லை.இது குறித்து மருத்துவர் ஒருவர் கூறுகையில் மரப் பலகையில் அதிக அளவு நுண் துகள்களைக் கொண்டுள்ளது.
மரப்பலகை
இதில் நாம் தக்காளி சாறு, பச்சை சிக்கன் துண்டுகள் அல்லது இஞ்சி மற்றும் பூண்டு எண்ணெய்கள் மரப் பலகையால் வெட்டும் போது வரும் சாறுகளை எளிதில் உறிஞ்சக்கூடியது. இப்படி உறிஞ்சுவதால் ஈரப்பதம் பாக்டீரியா, பூஞ்சை செழித்து வளர ஆரம்பிக்கும்.
இதில் சால்மோனெல்லா, ஈ.கோலி மற்றும் லிஸ்டீரியா போன்ற தீங்கு விளைவிக்கும் பாக்டீரியா உருவாகிறது. இதனால் காய்ச்சல், வயிற்றுப்போக்கு, வாந்தி மற்றும் நீரிழப்பு, குமட்டல் உள்ளிட்ட இரைப்பை குடல் நோய்த்தொற்றுகளையும் ஏற்படுத்தும். இது ஆரோக்கியத்திற்கு நல்லது இல்லை என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.