திரிஷாவுடன் "லிப்லாக்" செய்ய மாட்டேன்..வெளிப்படையாக மறுத்த நடிகர்..!!

Vijay Sethupathi Trisha Tamil Cinema Tamil Actors Tamil Actress
By Karthick Sep 11, 2023 03:00 PM GMT
Report

நடிகை திரிஷாவிற்கு முத்தம் கொடுக்கமாட்டேன் என நடிகர் ஒருவர் ஷூட்டிங்கின் போது மறுத்துள்ள சம்பவம் குறித்தான செய்திகள் வெளிவந்துள்ளது.

நடிகை திரிஷா

தமிழ் சினிமாவில், கிட்டத்தட்ட 20 ஆண்டுகளை நெருங்கி தற்போதும் முன்னணி நாயகியாக வளம் வருபவர் திரிஷா. தமிழை கடந்து தெலுங்கு, கன்னடம், மலையாளம் மொழி படங்களில் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் பிஸியாகி இருக்கிறார்.

wont-kiss-trisha-rejects-actor

தற்போது இவர் நடிப்பில் "லியோ" படம் வரும் அக்டோபர் 19-ஆம் தேதி வெளியாக இருக்கிறது. விஜய் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்த படம் மிக பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அதே போல அஜித்தை நடிப்பில் துவங்கவுள்ள "விடாமுயற்சி" படத்திலும் அவரே நாயகியாக நடிக்கிறார் என்ற தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

மறுத்த நடிகர்

இந்நிலையில், திரிஷாவிற்கு முத்தம் கொடுக்க நடிகர் மறுத்த சம்பவம் குறித்தான செய்திகள் வெளிவந்துள்ளன. 96 திரைப்படத்தின் இறுதி காட்சியில் விஜய் சேதுபதியின் தலையில் கைவைத்து அழுது விட்டு திரிஷா செல்வது போல படத்தில் இருக்கும். ஆனால் முதலில் ஸ்கிரிப்ட் பேப்பரில் இருவரும் முத்தம் கொடுத்து கொள்வது போல எழுதப்பட்டுள்ளது.

wont-kiss-trisha-rejects-actor

ஆனால், இதற்கு விஜய் சேதுபதி மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. தனது படங்களில் அவ்வாறான காட்சிகளில் நடிப்பதை தவிர்ப்பதாலும், மேலும் கதைக்கு அது பொருத்தமில்லாமல் இருக்கும் காரணத்தினால் விஜய் சேதுபதி அந்த காட்சியை மறுத்துவிடாததாக கூறப்படுகிறது.