அத்தனைக் கதவுகளையும் தட்டி விட்டார் அற்புதம் அம்மாள்"- கமல்ஹாசன்

kamalhassan Arputhammal
By Irumporai Jun 12, 2021 01:33 PM GMT
Report

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் கைது செய்யப்பட்டு 30 ஆண்டுகள் முடிவடைந்துள்ளது. மகனை மீட்க உலகின் அத்தனைக் கதவுகளையும் தட்டி விட்டார் அற்புதம் அம்மாள் என்று மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். 

ராஜீவ் கொலை வழக்கில் பேரறிவாளனிடம் சின்ன விசாரணை நடத்த வேண்டி இருப்பதாக 30 ஆண்டுகளுக்கு முன் 1991ம் ஆண்டு ஜூன் மாதம் 11ம் தேதி இரவு சிபிஐ சிறப்புப் புலனாய்வுப் பிரிவு , பேரறிவாளனின் பெற்றோரிடம் கூறியது.

ஆனால், ராஜீவ் கொலை குறித்த சில விளக்கங்களைப் பெறுவதற்கான விசாரணை என்று அழைத்துச் சென்ற அதிகாரிகள், அங்கு பேரறிவாளன் அளித்த வாக்குமூலத்தைத் திரித்து எழுதி அவரை கொலை வழக்கில் சேர்த்தனர்.

அதைத் தொடர்ந்து அந்த வழக்கில் தண்டிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட பேரறிவாளனும், மேலும் 6 தமிழர்களும் வரை 30 ஆண்டுகளாக சிறைக் கொட்டடியில் வாடிக் கொண்டிருக்கிறார்கள்.

30 ஆண்டுகளுக்கு முன் சிறை சென்ற மகன் பேரறிவாளன் விடுதலையாகி வீடு திரும்புவதைக் கண்டு அவரது வயது முதிர்ந்த தாயும், தந்தையும் மகிழ்ச்சியடைவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் ராமதாஸ் கேட்டுக்கொண்டிருக்கிறார்.

அரசியல் பிரபலங்கள் அல்லாமல் திரையுலகினரும் பேரறிவாளன் விடுதலைக்கு குரல் கொடுத்து வருகின்றனர். இந்நிலையில், அற்புதம்மாள் போராட்டம் குறித்து கமல்ஹாசனும் பதிவு செய்திருக்கிறார்.

அவரின் கண்ணீருக்கு ஒரு நியாயம் கிடைக்க வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறார்.