அடுத்த முறை பதக்கத்தின் நிறம் மாறுவதற்கான முயற்சியை மேற்கொள்வேன் : நீரஜ் சோப்ரா

India
By Irumporai Jul 24, 2022 06:32 AM GMT
Report

அமெரிக்காவின் ஒரேகான் மாகாணத்தில் உள்ள யூஜின் நகரில் 18-வது உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் நடந்து வருகின்றன. இதில் 22 பேர் கொண்ட இந்திய தடகள அணி, ஒலிம்பிக் சாம்பியன் நீரஜ் சோப்ரா தலைமையில் பங்கேற்றுள்ளது.

சாதனை படைத்த நீராஜ் சோப்ரா

இந்நிலையில், ஈட்டி எறிதல் போட்டியின் இறுதிச்சுற்று இன்று நடைபெற்றது. இதில், பங்கேற்ற இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தனது 4-வது வீச்சில் ஈட்டியை 88.13 மீட்டர் தூரத்திற்கு வீசினார்.

இதன் மூலம் உலக தடகள சாம்பியன்ஷிப் ஈட்டி எறிதல் இறுதிப்போட்டியில் நீரஜ் சோப்ரா 2-வது இடம்பிடித்து வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார். உலக தடகள போட்டியில் 19 ஆண்டுகளுக்கு பின் இந்தியா பதக்கம் வெல்வது இதுவே முதல் முறையாகும். 

பதக்கத்தின் நிறம் மாறும்

வெள்ளிப்பதக்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு பிரதமர் மோடி, மத்திய மந்திரிகள் ராஜ்நாத் சிங், ஜெய்சங்கர் உள்ளிட்டோர் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். பதக்கம் வென்றது குறித்து நீரஜ் சோப்ரா செய்தியாளர்களிடம் பேசுகையில் 

ஒலிம்பிக் சாம்பியன் என்பதற்காக என் மீது அழுத்தம் இருந்தது போன்று நான் உணரவில்லை. 3வது முறை ஈட்டி எறிந்த பின்னர் கூட என் மீது எனக்கு நம்பிக்கை இருந்தது.

அடுத்த முறை பதக்கத்தின் நிறம் மாறுவதற்கான முயற்சியை மேற்கொள்வேன்  : நீரஜ் சோப்ரா | Won A Medal For The Country Neeraj Chopra

மீண்டு வந்து, வெள்ளி பதக்கம் வென்றுள்ளேன். அதனை நல்லதென்றே உணர்கிறேன். அடுத்த முறை பதக்கத்தின் நிறம் மாறுவதற்கான முயற்சியை மேற்கொள்வேன் என வெள்ளி பதக்கம் வென்ற நீரஜ் சோப்ரா கூறியுள்ளார்.

நன்றாக விளையாடுவேன் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது. வெள்ளி பதக்கம் கிடைத்த முடிவால் எனக்கு திருப்தியே. எனது நாட்டுக்காக ஒரு பதக்கம் வெல்ல முடிந்தது என்பதில் நான் மகிழ்ச்சி அடைந்துள்ளேன் என்றும் அவர் கூறியுள்ளார் .