பெண்களிடம் சில்மிஷம் ..... பிரபல கட்சியினரை மரத்தில் கட்டி வைத்து உதைத்த பொதுமக்கள்
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த மத்தூர்அருகே உள்ள தர்மபுரி-திருப்பத்தூர் சாலையில், களர்பதி பகுதியில் பிக் அப் வாகனத்தில் பெண்கள் சிலர் சென்றுள்ளனர்.
அப்போது இருமத்தூரிலிருந்து மது அருந்தி விட்டு டாட்டா இண்டிகா காரில் வந்த வி.சி.கட்சியினரை சேர்ந்த ஏழு பேர் கொண்ட கும்பல், முன்னால் சென்ற பிக்கப் வாகனத்தில் இருந்த பெண்களிடம் கலாட்டா செய்துள்ளனர்.
ஒரு கட்டத்தில் போதை தலைக்கேறிய நிலையில், பிக்கப் வாகனத்தின் குறுக்கே காரை நிறுத்தி பிக் அப் வாகனத்தை ஓட்டி வந்த டிரைவர் முருகனை தாக்கியுள்ளனர்.
ஆத்திரமடைந்த பிக்கப் வாகனத்தில் இருந்தவர்கள் மற்றும் அந்த வழியாக சென்ற பொதுமக்கள் ஆகியோர், காரில் வந்தவர்களை மடக்கி பிடித்தனர்.
அதில் நான்கு பேர் காருடன் தப்பி சென்றனர். மூன்று பேரை பிடித்த பொதுமக்கள் அவர்களை மரத்தில் கட்டி தர்மஅடி கொடுத்தனர்.
பின்னர் அந்த வழியாக சென்ற போச்சம்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபாவதி மற்றும் போலீசார், பொதுமக்களிடம் சமரச முயற்சியில் ஈடுபட்டபோது கைகலப்பு ஏற்பட்டது.
இதனால் சிறிய அளவில் தடியடி நடத்தப்பட்டது.
இதில் ஆத்திரமடைந்த பொதுமக்கள் போலீசார் வாகனத்தை முற்றுகையிட்டனர். இதையடித்து அங்கு வந்த மத்தூர் போலீசார், இச்சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்து விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.