சிறையில் அடைக்கப்பட்ட பெண் கைதிகள் கர்ப்பம் - விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்

transgender NewJersey womensprisonerspregnant
By Petchi Avudaiappan Apr 18, 2022 04:26 PM GMT
Report

அமெரிக்காவில் சிறையில் அடைக்கப்பட்ட பெண் கைதிகள் கர்ப்பம் அடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

அமெரிக்காவின் நியூ ஜெர்ஸி மாகாணத்தில் உள்ள கிளிண்டன் நகரில் இருக்கும் மகளிர் சிறையில் சுமார் 800 பெண் கைதிகளும்,  27 திருநங்கைகளும் அடைக்கப்பட்டுள்ளனர். கடந்த 2021 ஆம் ஆண்டு 18 மாதங்கள் ஆண்கள் சிறைகளில் வாழும்படி கட்டாயப்படுத்தப்பட்ட ஒரு பெண்ணால் தொடரப்பட்ட வழக்கில் கைதிகளை அவர்களின் பாலின அடையாளத்திற்கு ஏற்ப தங்கவைக்கும் நடைமுறை இந்த சிறையில் உள்ளது. 

இந்நிலையில் பரோலில் கூட வெளிவரமுடியாத பெண் கைதி உட்பட இருவர் கர்ப்பமடைந்துள்ளதாக தகவல் வெளியாகி அதிகாரிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இதனைத் தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் அங்குள்ள திருநங்கை கைதி இருவருடன் கொண்ட உறவு காரணமாகவே இருவரும் கர்ப்பமடைந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.