விஜய்யை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் - பெண்கள் சாகும் வரை உண்ணாவிரதம்

Vijay Thamizhaga Vetri Kazhagam
By Karthikraja May 08, 2026 07:22 AM GMT
Report

விஜய்யை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என பெண்கள் சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினர்.

தவெகவிற்கு பெரும்பான்மை கிடைக்குமா?

2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. 

விஜய்யை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் - பெண்கள் சாகும் வரை உண்ணாவிரதம் | Womens Hunger Protest To Support Tvk Vijay

ஆட்சியமைக்க பெரும்பான்மைக்கு 118 எம்எல்ஏ க்கள் தேவைப்படும் நிலையில், 5 எம்எல்ஏக்களை கொண்ட காங்கிரஸ் கட்சி நேற்று தவெகவிற்கு தனது ஆதரவை வழங்கியது.

மேலும் 5 எம்எல்ஏக்கள் ஆதரவு தேவைப்படும் நிலையில், தலா 2 எம்எல்ஏக்கள் வைத்துள்ள விசிக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளிடம் தவெக ஆதரவு கோரியுள்ளது.

இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இன்று விஜய்யக்கு ஆதரவளிப்பது குறித்து ஆலோசித்து வருகின்றன. விசிக இன்று மாலை கலந்தாலோசித்து நாளை முடிவை அறிவிப்பதாக தெரிவித்துள்ளது.

தனிப்பெரும் கட்சி என்ற அடிப்படையில் ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்குமாறு தவெக தலைவர் விஜய் தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகராயை சந்தித்து உரிமை கோரினர்.

விஜய்யை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் - பெண்கள் சாகும் வரை உண்ணாவிரதம் | Womens Hunger Protest To Support Tvk Vijay

ஆனால், 118 எம்எல்ஏக்கள் இருந்தால் தான் ஆட்சியமைக்க அழைப்பு விடுக்க முடியும் எனக்கூறி ஆளுநர், ஆட்சியமைக்க அழைப்பு விடுக்க மறுத்து விட்டார்.

தவெகவிற்கு ஆதரவாக உண்ணாவிரதம்

பெரும்பான்மையை சட்டமன்றத்தில் தான் நிரூபிக்க வேண்டும், ராஜபவனில் அல்ல என ஆளுநரின் இந்த செயலுக்கு பல்வேறு கட்சிகளும் கண்டனம் தெரிவித்துள்ளன.  

விஜய்யை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் - பெண்கள் சாகும் வரை உண்ணாவிரதம் | Womens Hunger Protest To Support Tvk Vijay

ஆளுநரின் இந்த செயலை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக தவெகவின் கூட்டணி கட்சியான தமிழ்நாடு காங்கிரஸ் அறிவித்துள்ளது. 

விஜய்யை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் - பெண்கள் சாகும் வரை உண்ணாவிரதம் | Womens Hunger Protest To Support Tvk Vijay

மேலும், தவெகவிற்கு ஆதரவாக மெரினாவில் போராட்டம் நடைபெற சாத்தியம் உள்ளதாக கருதப்படும் நிலையில், மெரினா கடற்கரையில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், தவெக தலைவர் விஜய்யை ஆட்சி அமைக்க அழைக்கக் கோரி, திண்டுக்கல்லில் 3 பெண்கள் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட தொடங்கினர். 

விஜய்யை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் - பெண்கள் சாகும் வரை உண்ணாவிரதம் | Womens Hunger Protest To Support Tvk Vijay

உடனடியாக அங்கு ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டு, அந்த 2 பெண்களையும் வலுக்கட்டாயாமாக கைது செய்து அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

மேலும், ஆளுநர் மாளிகை முன்பு சாகும் வரை உண்ணாவிரதம் இருக்க முயன்ற தவெக ஆதரவாளர்களையும் காவல்துறையினர் அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.