500 ரூபாய்க்கு குழந்தைகளை வாடகைக்கு எடுத்த பெண்கள் - பிச்சை எடுத்த பயங்கரம்!
குழந்தைகளை வாடகைக்கு எடுத்து பெண்கள் பிச்சை எடுத்து வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குழந்தை வாடகைக்கு..
ஆடி அமாவசையை முன்னிட்டு திருச்சி ஸ்ரீரங்கத்தில் உள்ள அம்மா மண்டம் மற்றும் காவிரிக்கரையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதற்காக ஆயிரக்கணக்கில் மக்கள் கூடியிருந்தனர்.
இதனை பயன்படுத்தி காசு பார்க்க 70 க்கும் மேற்பட்ட பெண்கள், கைகளில் குழந்தைகளை வைத்துக் கொண்டு பிச்சை எடுத்து வந்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பரபரப்பு
இது குறித்து விசாரித்த போது 500 ரூபாய்க்கு குழந்தைகளை வாடகைக்கு வாங்கி அந்த பெண்கள் பிச்சை எடுத்தது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து, இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதனையடுத்து, மாநகர காவல் ஆணையர் உத்தரவின்பேரில் ஆதரவற்ற நிலையில் முக்கிய சந்திப்பு சிக்னல்கள் மற்றும் சாலையில் பிச்சை எடுத்து வருபவர்களை மீட்டு காப்பங்களில் ஒப்படைக்க உரிய நடவடிக்கை எடுத்து வருவதாக கூறப்பட்டுள்ளது.