நமது நலதிட்டங்களை பார்த்து சிலருக்கு எரிச்சல், பொறாமை - மு.க.ஸ்டாலின் பெருமிதம்!

M K Stalin DMK
By Jiyath Jul 09, 2023 07:30 AM GMT
Report

மகளிர் உரிமைத் தொகைத் திட்டம் சிலருக்கு எரிச்சலையும் பொறாமையையும் ஏற்படுத்தியுள்ளது என்று முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் பேசியுள்ளார்.

மகளிர் உரிமைத்தொகை திட்டம்

தமிழக முதலமைச்சர் அளித்த தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றுதான் மகளிர் உரிமத்தொகை திட்டம். இந்த திட்டத்தின் கீழ் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும். இத்திட்டத்தை செயல்படுத்துவதற்காக முதல் கட்டமாக 7000 கோடி ரூபாயை நடப்பு பட்ஜெட்டில் தமிழ்நாடு அரசு ஒதுக்கியுள்ளது. அத்துடன் ஒரு கோடி மகளிருக்கு இந்த உரிமை தொகையை வழங்க திட்டமிட்டுள்ளது.

நமது நலதிட்டங்களை பார்த்து சிலருக்கு எரிச்சல், பொறாமை - மு.க.ஸ்டாலின் பெருமிதம்! | Womens Entitlement Scheme Caused Irritation Ibc

அதில் யாருக்கெல்லாம் இந்த தொகை கிடையாது என்பதற்கு தமிழக அரசு சில விதிமுறைகளை வகுத்திருந்தது. அந்த விதிமுறைகள் குறித்து எதிர்க்கட்சிகளும் அரசியல்வாதிகள் பலரும் விமர்சனம் செய்து வருகிறார்கள்.

இந்த விதிமுறைகள் ஏதும் இல்லாமல் அனைத்து மகளிருக்கும் 1000 ரூபாய் வழங்க வேண்டும் என்று பேசிவருகின்றனர்.

நலதிட்டங்கள்

இந்நிலையில், இன்று சென்னையில் நடைபெற்ற திருநாவுக்கரசர் இல்ல திருமணவிழாவில் கலந்து கொண்டு பேசிய அவர் "திராவிட இயக்கம் ஒரு கொள்கை குடும்பம், தமிழ்நாட்டில் திராவிட மாடல் ஆட்சி சிறப்பாக நடைபெற்று வருகிறது.

தேர்தல் நேரத்தில் நாங்கள் அளித்த வாக்குறுதிகளை தொடர்ந்து நிறைவேற்றிக்கொண்டிருக்கிறோம். காலை சிற்றுண்டி, பெண்களுக்கு இலவச பேருந்து, மகளிர் உரிமைத் தொகை உள்ளிட்டவை இதற்கு உதாரணம்.

நமது நலதிட்டங்களை பார்த்து சிலருக்கு எரிச்சல், பொறாமை - மு.க.ஸ்டாலின் பெருமிதம்! | Womens Entitlement Scheme Caused Irritation Ibc

மகளிர் உரிமைத்தொகை திட்டம் வருகிற செப்டெம்பர் 15 ஆம் தேதிமுதல் தொடங்க உள்ளது என்று தெரிவித்தார். தொடர்ந்து அவர் பேசுகையில் "மகளிர் உரிமைத் தொகை திட்டம் எரிச்சலையும், பொறாமையையும் ஏற்படுத்தியுள்ளது. அதனால் அவர்கள் வாய்க்கு வந்தபடி பேசிக்கொண்டு இருக்கிறார்கள்.

நம்முடைய நலத்திட்டங்களை விமர்சிப்பவர்களை பார்த்து, நிறைய பதில் கேள்வி கேட்க முடியும். வெளிநாட்டில் உள்ள கறுப்புப் பணத்தை மீட்டு ஒருவருக்கு ரூ.15 லட்சம் வழங்கலாம் என்று 2014 தேர்தலுக்கு முன்பாக மோடி பேசினார்.

ரூ.15 லட்சம் கூட வேண்டாம் ரூ.15 ஆயிரமாவது தந்தார்களா?. தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றையாவது பாஜக நிறைவேற்றியுள்ளதா?என்று அவர் பேசினார்.