Women’s WC: உலகக்கோப்பை வென்ற உற்சாகத்தில் மைதானத்தை அலறவிட்ட இந்திய மகளிர் அணி!

Cricket South Africa
By Sumathi Jan 30, 2023 05:32 AM GMT
Report

19 வயதுக்குட்பட்ட இந்திய மகளிர் அணி உலகக்கோப்பையை வென்றுள்ளது.

Women’s WC

தென்னாப்பிரிக்காவின் சென்வீஸ் பார்க்கில் மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் முதல் முறையாக நடத்தப்பட்டது. இந்திய அணியின் அபார பந்துவீச்சைத் தாக்குப்பிடிக்க முடியாமல் இங்கிலாந்து அணி 68 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது

Women’s WC: உலகக்கோப்பை வென்ற உற்சாகத்தில் மைதானத்தை அலறவிட்ட இந்திய மகளிர் அணி! | Womens Cricket Team Celebrates After World Cup Win

பின்னர், 69 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய மகளிர் அணி 14 ஓவர்களில் 69 ரன்களை எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. செளமியா 24 ரன்களையும், திரிஷா 24 ரன்களையும் எடுத்தனர்.

கொண்டாட்டம்

வெற்றி மகிழ்ச்சியில் அனைவரும் தாங்கள் பெற்ற தங்கப்பதக்கத்துடன் காலா சஷ்மா பாடலுக்கு மைதானத்திலேயே ஆடினர். இந்த வீடியோவை ஐசிசி தங்களது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.

இந்த வீடியோ தற்பொது வைரலாகி வருகிறது. ஷபாலி வர்மா தலைமையில் உலகக்கோப்பையை வென்ற இந்திய அணிக்கு அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்துகளை பகிர்ந்து வருகின்றனர். நாட்டுக்கு பெருமை சேர்த்த U19 இந்திய மகளிர் அணிக்கு, ரூ.5 கோடி பரிசுத் தொகையை இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் ஜெய்ஷா அறிவித்துள்ளார்.