பெண்கள் உஷார்...கொரோனா ஊசியால் 30000 பெண்களுக்கு மாதவிடாய் பாதிப்பு - வெளியான அதிர்ச்சி தகவல்

Covid Vaccine Menstruation Womens
By Thahir Sep 17, 2021 02:52 AM GMT
Report

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட பின்னர் மாதவிடாயில் இடையூறு ஏற்பட்டுள்ளதாக 30,000 க்கும் மேற்பட்ட பிரித்தானிய பெண்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த பிரச்சனை சிறிது காலம் மட்டுமே நீடிக்கும் எனவும், தொடர்புடைய ஆய்வுக்கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெண்கள் உஷார்...கொரோனா ஊசியால் 30000 பெண்களுக்கு மாதவிடாய் பாதிப்பு - வெளியான அதிர்ச்சி தகவல் | Womens Covid Vaccine Menstruation

இந்த விவகராம் தொடர்பில் ஆய்வுக்கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ள டாக்டர் விக்டோரியா மேல் கொரோனா தடுப்பூசி கருவுறுதலை பாதிக்கும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என குறிப்பிட்டுள்ளார்.

இருப்பினும் இது தொடர்பில் விரிவான ஆய்வு ஒன்றை முன்னெடுக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பெண்கள் மத்தியில் தடுப்பூசி தொடர்பில் அச்சம் நீடிப்பதற்கு காரணம், தடுப்பூசி போடுவதால் எதிர்காலத்தில் கர்ப்பத்திற்கான வாய்ப்புகள் பாதிக்கப்படும் என்று பொய்யான கருத்துகளே எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இருப்பினும் இதுவரை சுமார் 30,000 பிரித்தானிய பெண்கள் தங்கள் மாதவிடாயில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக புகார் தெரிவித்துள்ளதில் குறிப்பிடத்தக்க ஆதாரம் இல்லை என்றே டாக்டர் விக்டோரியா மேல் தெரிவித்துள்ளார்.

மேலும், மாடர்னா அல்லது பைஸர் தடுப்பூசி போட்டுக்கொண்ட பெரும்பாலான பெண்களே தங்களுக்கு மாதவிடாயில் மாறுதல் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.

மட்டுமின்றி தடுப்பூசிக்கும் மாதவிடாய் குளறுபடிக்கும் தொடர்பு இருப்பின், அது தடுப்பூசியின் நோய் எதிர்ப்பு சக்தியின் விளைவாக இருக்கலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மாதவிடாய் குளறுபடிகள் நீடிக்கும் என்றால் பெண்கள் கண்டிப்பாக மருத்துவ உதவிகளை நாட வேண்டும் எனவும் டாக்டர் விக்டோரியா மேல் கோரிக்கை வைத்துள்ளார்.