தவெக கூட்டத்தில் பெண் கடும் வாக்குவாதம் - கோபத்தில் புஸ்ஸி ஆனந்த் செய்த சம்பவம்!

Tamil nadu Thamizhaga Vetri Kazhagam
By Swetha Sep 30, 2024 02:33 AM GMT
Report

தமிழக வெற்றிக்கழக கூட்டத்தில் மாநில பொதுச்செயலாளரிடம் பெண் வாக்குவாதம் செய்தார்.

பெண் வாக்குவாதம்

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகத்ததை தொடங்கி உள்ளார். அக்கட்சியின் முதல் மாநாடு என்பது அடுத்த மாதம் 27 ம் தேதி நடைபெற உள்ளது. மாநாட்டுக்கான ஏற்பாடுகள் விக்கிரவாண்டியில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தவெக கூட்டத்தில் பெண் கடும் வாக்குவாதம் - கோபத்தில் புஸ்ஸி ஆனந்த் செய்த சம்பவம்! | Womens Argument With Pussi Anand Makes Him Walkout

இந்த நிலையில், தமிழக வெற்றிக்கழக கட்சியின் முதல் மாநாட்டிற்கான ஆலோசனைக் கூட்டம் தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் நடந்தது. அதில் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கலந்து கொண்டார்.

அப்போது அவர் பேசுகையில், முன் வரிசையில் அமர்ந்திருந்த பெண் ஒருவர் புஸ்ஸி ஆனந்திடம் கடுமையாக வாக்குவாதத்தில் ஈடுப்பட்டார். அதாவது, தனது தம்பி பல ஆண்டுகளாக விஜய் ரசிகர் மன்றத்தில் உறுப்பினராக இருப்பதாகவும்,

TN 07 CM 2026 என நம்பர் பிளேட் வைத்ததற்கு என்ன காரணம்? புஸ்ஸி ஆனந்த் விளக்கம்!

TN 07 CM 2026 என நம்பர் பிளேட் வைத்ததற்கு என்ன காரணம்? புஸ்ஸி ஆனந்த் விளக்கம்!

புஸ்ஸி ஆனந்த்

அவருக்கான உரிய அங்கீகாரம் கட்சியில் வழங்கப்படவில்லை. அவர் ஓரங்கட்டப்பட்டுள்ளார். அதற்கான காரணத்தை நீங்கள் தெரிவிக்க வேண்டும். இதற்கு உடனே தீர்வு வேண்டும்" என புஸ்ஸி ஆனந்திடம் கேள்வி எழுப்பினார்.

தவெக கூட்டத்தில் பெண் கடும் வாக்குவாதம் - கோபத்தில் புஸ்ஸி ஆனந்த் செய்த சம்பவம்! | Womens Argument With Pussi Anand Makes Him Walkout

அந்தப் பெண்ணின் வேண்டுகோளை கேட்ட புஸ்ஸி ஆனந்த், உங்களது புகாரை எழுதிக்கொடுங்கள். தீர்வு சொல்கிறோம் என்று கூறினார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதனால் புஸ்ஸி ஆனந்த் பேச்சை நிறுத்தி விட்டு அங்கிருந்து உடனடியாக கிளம்பி அடுத்த கூட்டத்துக்கு சென்று விட்டார்.