தகுதியான இல்லத்தரசிகளுக்கே ரூ.1000 வழங்கப்படும் - நிதியமைச்சர் அதிரடி

explain womens 1000 rupees give finance minister
By Anupriyamkumaresan Aug 13, 2021 08:35 AM GMT
Anupriyamkumaresan

Anupriyamkumaresan

in தமிழ்நாடு
Report

குடும்பத் தலைவர் என்பது பெண்ணாக இருந்தால் மட்டுமே உதவித்தொகை என்பது தவறான புரிதல் என விளக்கமளித்துள்ளார்.

நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன். தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சட்டப்பேரவையில், பொது பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்தார்.

தகுதியான இல்லத்தரசிகளுக்கே ரூ.1000 வழங்கப்படும் - நிதியமைச்சர் அதிரடி | Womens 1000 Rupees Give Finance Minister Explain

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த பட்ஜெட்டில் துறைவாரியான நிதி ஒதுக்கீடு என பல்வேறு அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன.

இல்லத்தரசிகளுக்கு ரூ.1,000 வழங்கும் திட்டம் குறித்துப் பேசிய நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், ''குடும்பத்தலைவர் என்பது பெண்ணாக இருந்தால் மட்டுமே உதவித்தொகை என்பது தவறான புரிதல்.

உதவித்தொகை இல்லத்தரசிகளுக்கானது என்பதால் குடும்பத்தலைவர் பெயரை மாற்றத் தேவையில்லை. இல்லத்தரசிகளுக்கு ரூ.1,000 வழங்கும் திட்டம் தகுதியான குடும்பங்களை கண்டறிந்து அமல்படுத்தப்படும்.

தகுதியான இல்லத்தரசிகளுக்கே ரூ.1000 வழங்கப்படும் - நிதியமைச்சர் அதிரடி | Womens 1000 Rupees Give Finance Minister Explain

அரசு ஊழியர்களுக்கான பேறுகால விடுப்பு 12 மாதங்களாக அதிகரிக்கப்படுகிறது. ஜூலை 1, 2021 முதல் முன் தேதியிட்டு இந்நடைமுறை அமலாகும்'' என அறிவித்துள்ளார்.