கண்டிப்பாக மகளிருக்கு ரூ.1000 நிச்சயம் வழங்கப்படும் : உதயநிதி ஸ்டாலின்
அதிமுக ஆட்சியில் ஒரு ஆண்டில் ஒரு கோடிப் பேருக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்பட்டது. ஆனால், திமுக ஆட்சியில் 8 மாதங்களில் 10 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பகுதியில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
அப்போது பேசிய அவர் அதிமுக ஆட்சியில் ஒரு ஆண்டில் ஒரு கோடிப் பேருக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்பட்டது. ஆனால், திமுக ஆட்சியில் 8 மாதங்களில் 10 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. திமுக ஆட்சிக்கு வந்த இந்த எட்டு மாதங்களில் தேர்தல் வாக்குறுதிகள் படிப்படியாக நிறைவேற்றப்பட்டு வருகிறது.
அந்த வகையில், மகளிருக்கு மாதம் ரூ.1000 நிச்சயமாக வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். மேலும், பாஜகவுக்கு ம்,அதன் அடிமையான அதிமுகவுக்கும் திமுக சிம்ம சொப்பனமாக விளங்குகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.