ஹிஜாப் போட்டுட்டு exam எழுத கூடாது....தடுத்த Invigilator..தவித்த மாணவி
ஹிந்தி தேர்வு எழுத வந்த ஆசிரியை ஹிஜாப் அணிந்திருந்ததால், அவருக்கு தேர்வு எழுத அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம் திருவண்ணாமலையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஹிந்தி தேர்வு
பாரத் இந்தி பிரசார சபாவின் மூலமாக தமிழகத்தில் ஹிந்தி பயிலும் மாணவ மாணவியருக்கு 8 நிலை தேர்வுகள் நடத்தப்பட்டு அதில் தேர்ச்சி பெறுவோருக்கு பண்டிட் என்ற படமும் வழங்கப்பட்டு வருகிறது. தமிழகமெங்கும் நடைபெறும் இந்த தேர்வினை ஆயிரத்திற்கு அதிகமானோர் எழுதி வருகின்றனர்.
அனுமதி மறுப்பு
இன்றும் இந்த தேர்வுகள் நடத்தப்பட்டது. இந்த தேர்வினை திருவண்ணாமலை மாவட்டம் கோமாசிபாடி கரிகாலன் தெருவை சேர்ந்த அரபு மொழி ஆசிரியர் ஷபானா என்பவர் அதே பகுதியிலுள்ள ஒரு தனியார் பள்ளியில் எழுத வந்துள்ளார்.
ஹால்டிக்கெட் சரிபார்த்த பிறகு தேர்வறைக்குள் சென்ற ஷபானாவிடம் தேர்வு தொடங்கிய நிலையில் 10 நிமிடத்தில், தேர்வு நடத்தியவர்கள் ஹிஜாப்பை அகற்றும்படி கூறியுள்ளனர். இதனை ஷபானா மருகா அவர் தேர்வறையில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தேர்வு மையத்தில் பெரும் பரபரப்பபை ஏற்படுத்தி இருக்கிறது.