கேப்டன் வரணும்..நாங்க பாக்கணும்..விஜயகாந்தை காண கண்ணீரோடு காத்திருந்த பெண் தொண்டர்கள்
தேமுதிக தலைவர் விஜயகாந்தின் 70-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.
விஜயகாந்தை காண கண்ணீரோடு காத்திருந்த பெண் தொண்டர்கள்
அவரின் பிறந்த நாளையொட்டி அவரது தொண்டர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். விஜயகாந்திற்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில் சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதி தலைமை அலுவலகத்தில் காலை முதலே ஏராளமான தொண்டர்கள் கேப்டன் விஜயகாந்தை காண குவிந்திருந்தனர்.
அப்போது மகளிரணி பெண் தொண்டர்கள் விஜயகாந்தை காண கண்ணீரோடு காத்திருந்தனர். விஜயகாந்தை ரொம்ப மிஸ் பண்ணுவதாகவும், எங்கள் உயிரே எங்களை விட்டு போகிற மாதிரி இருப்பதாகவும்,
அவரை பார்க்காத ஒவ்வொரு நாளும் எங்க உயிரே எங்கள் கிட்ட இல்லாத மாதிரி இருக்கு.
என்று கண்ணீர் மல்க தெரிவித்தனர். பின்னர் தேமுதிக தலைமை அலுவலகம் வந்த விஜயகாந்தை பெண் தொண்டர்கள் உற்சாகமாக வரவேற்றனர்.