ஊரடங்கில் காய்கறி விற்பனைக்கு மகளிர் சுய உதவி குழுக்களும் ஈடுபடலாம்-அமைச்சர் எஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன்
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்தஅமைச்சர் எஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் .
நகர் பகுதிகளிலும் ஊராட்சி பகுதிகளிலும் நடமாடும் வாகனங்கள் மூலம் காய்கறிகள் விற்பணை செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருவதாக கூறினார்.
நகராட்சிபகுதிகளில் இரண்டு வார்டுக்கு ஒருவாகனம் மூலமாகவும் ஊராட்சி பகுதிகளில் அந்த ஊரின் சூழ்நிலைக்கு ஏற்றார் போல் தள்ளுவண்டி போன்ற வாகனங்கள் மூலமாக விறபனை செய்து கொள்ளலாம் என கூறினார்.
ஊரடங்கில் காய்கறி விற்பனை செய்ய மகளிர் சுயஉதவி குழுக்கள் முன்வந்தால் அவர்களையும் பயன்படுத்திக்கொள்ள அறிவுறுத்தி உள்ளதாகவும் கூறிய அமைச்சர்.
முதல்வர் உட்பட அனைவரும் தடுப்பூசி போட்டுள்ளோம் நடிகர் விவேக் இறந்ததால்தான் மக்களுக்கு தடுப்பூசி மீது அச்சம் ஏற்பட்டு விட்டது ஆனால் வேறு யாரும் இறக்கவில்லை என அமைச்சர் கூறினார்.