ஒரு அரசு அதிகாரிக்கு இப்படியா? அலறிய பெண் வி.ஏ.ஓ - அறைக்குள் வைத்து பூட்டிய உதவியாளர்!
பெண் வி.ஏ.ஓவை உதவியாளர் ஒருவர் அறைக்குள் வைத்து பூட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெண் வி.ஏ.ஓ
கள்ளக்குறிச்சி மாவட்டம் வடக்கனேந்தல் கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலராக(வி.ஏ.ஓ) தமிழரசி என்பவர் இருந்து வருகிறார். அதேபோல கிராம நிர்வாக உதவியாளராக சங்கீதா என்பவரும் பணியாற்றி வருகின்றனர். இருவருக்கும் இடையே தகராறு ஏற்படும் என்று கூறப்படுகிறது.
எனவே அடிக்கடி அலுவலகத்திலேயே சண்டைப்போட்டுக்கொள்வார்கள் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில், தமிழரசிக்கும், சங்கீதாவிற்கும் இடையே இரண்டு நாட்களுக்கு முன்பு மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது.
ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றியதில் கோபமான சங்கீதா, விஏஓ தமிழரசியை அலுவலகத்தின் அறையில் வைத்து பூட்டிவிட்டு அங்கிருந்து கிளம்பியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த தமிழரசி, “ஒரு அரசு அதிகாரியை உள்ளே வைத்து பூட்டுவது எந்த விதத்தில் நியாயம்?
உதவியாளர்
கதவை திறந்துவிடு இல்லையின்னா... தாசில்தார்கிட்ட சொல்லி கடும் நடவடிக்கை எடுக்கச் செய்வேன்” என்று கத்தி கூச்சலிட்டுள்ளார். ஆனால் இதனை சற்றும் பொருட்படுத்தாமல் சங்கீதா அங்கிருந்து கிளம்பியுள்ளார்.
இதை தொடர்ந்து, விஏஓ தமிழரசி உயர் அதிகாரிகளுக்கு செல்போன் மூலம் இது குறித்து தகவல் தெரிவித்துள்ளார். பின்பு அதிகாரிகளின் தலையீட்டின் பேரில் மீண்டும் அலுவலகம் வந்த சங்கீதா பூட்டிய அறையை திறந்துவிட்டதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலான நிலையில், சங்கீதா மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.