பெண்கள் என்ன உங்களுக்கு மாடுகளா ? - மன்னிப்பு கேட்ட பால் உற்பத்தி நிறுவனம், நடந்தது என்ன?

milk ad depicting women Dairy brand apologizes
By Irumporai Dec 17, 2021 04:55 AM GMT
Irumporai

Irumporai

in உலகம்
Report

விளம்பரம் இல்லாமல் இன்றைக்கு எந்த பொருளும் சந்தைக்கு வருவதில்லை. விளம்பரம் தான் ஒரு பொருளின் வியாபாரத்தை நிர்ணயிக்கிறது. அதனால் பொருளின் தயாரிப்பை விடவும் விளம்பரத்திற்காக அதிகம் மெனக்கெடுகிறார்கள்.

ஆனால், அந்த விளம்பரங்களே பெரும் சர்ச்சையில் முடிந்து விடுவதும் உண்டு அந்த வகையில் தற்போது புதிய சர்சையில் சிக்கியுள்ளது, தென்கொரியாவின் மிகப்பெரிய பால் உற்பத்தி நிறுவனம் தான் இந்த சியோல் மில்க்.

சியோ மில்க தனது பால் விளம்பரத்தில்,  ஒருவர் காட்டுப்பகுதியில் கேமராவை எடுத்துக்கொண்டு செல்கிறார். அங்கே புல்வெளி நிறைந்த பகுதியில் சில பெண்கள் வெள்ளை உடை அணிந்து ஓடையில் ஓடும் நீரை குடிக்கிறார்கள். பின்னர் புல்வெளியில் யோகா செய்கிறார்கள்.இதை வீடியோவாக பதிவு செய்கின்ரார் அந்த நபர்.

பெண்கள் என்ன உங்களுக்கு மாடுகளா ? -  மன்னிப்பு கேட்ட பால் உற்பத்தி நிறுவனம்,  நடந்தது என்ன? | Women Turn Cow Milk Production Compa
இயற்கையிலிருந்து தூய்மையான நீரை அவர்கள் குடிக்கிறார்கள். இயற்கையான உணவுகளை சாப்பிடுகிறார்கள். அமைதியான சூழ்நிலையில் அமைதியாக வாழ்கின்றார்கள். நான் அவர்கள் அருகில் கவனமுடன் செல்ல முயற்சிக்கிறேன் என்று சொல்லிக்கொண்டே அந்தப் பெண்கள் இருக்கும் பகுதிக்கு அருகில் செல்கிறார்.

பெண்கள் என்ன உங்களுக்கு மாடுகளா ? -  மன்னிப்பு கேட்ட பால் உற்பத்தி நிறுவனம்,  நடந்தது என்ன? | Women Turn Cow Milk Production Compa

 அப்போது அந்த காட்டுப்பகுதியில் கீழே கிடக்கும் மரத்துண்டின் மேல் தனது காலை வைத்ததால் அது உடைகிறது. அந்த உடையும் சத்தத்தை கேட்ட பெண்கள் திரும்பிப் பார்க்கிறார்கள்.

உடனே அவர்கள் அனைவரும் பசுமாடுகளாக மாறி விடுகின்றார்கள். இதையடுத்து தூய்மையான நீர், ஆரோக்கியமான உணவு, 100 சதவிகிதம் சியோல் பால். ‘ இயற்கையான சூழ்நிலையில் இருந்து இயற்கையான பால்’ என்று அந்த விளம்பரம் முடிகிறது.

பெண்களை பசுமாடுகள் போல் சித்தரித்து பால் விளம்பரம் செய்ததால், சியோல் பால் உற்பத்தி நிறுவனம் மீது. கண்டனக் குரல்கள் எழுந்து சியோல் பால் உற்பத்தி நிறுவனத்தின் பொருட்களை புறக்கணிக்க ஆரம்பித்தனர்.

இதனால் சியோல் பால் உற்பத்தி நிறுவனத்தின் பொருட்கள் விற்பனை சரிந்தது . விற்பனையை உயர்த்த வேண்டும் என்ற எண்ணத்தில் அந்த வீடியோவை வெளியிட்ட அந்த நிறுவனத்திற்கு விற்பனை சரிந்தது ஒரே அதிர்ச்சியாகிவிட்டது.

இதையடுத்து அந்த சியோல் பால் நிறுவனம், பெண்களை பசுக்கள் போல் சித்தரித்து விளம்பர வீடியோ எடுத்ததற்காக மன்னிப்பு கேட்டுள்ளது.