5 வருடங்களாக தொப்பை என நினைத்த பெண் - ஸ்கேனில் தெரிய வந்த அதிர்ச்சி
தொப்பை என நினைத்த பெண்ணிற்கு மருத்துவ பரிசோதனையில் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
தொப்பை
நாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்த 54 வயது பெண் ஒருவர் தொப்பையை குறைப்பதற்காக கடந்த 5 வருடங்களாக வாக்கிங், டயட் என பல முயற்சிகளை செய்துள்ளார்.
ஆனால் கடும் முயற்சிகள் எடுத்தும் தொப்பை குறையாத நிலையில், நாகப்பட்டினத்தில் உள்ள மருத்துவமனையை நாடியுள்ளார்.
11 கிலோ கட்டி
அங்கு அவருக்கு ஸ்கேன் செய்து பார்த்த போது வயிற்றில் பெரிய அளவில் சினைப்பை கட்டி இருந்தது தெரிய வந்தது.
அதனையடுத்து 3 மணி நேரம் அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள் எந்த வித பாதிப்புமின்றி, வயிற்றில் இருந்த 11 கிலோ எடை கொண்ட சினைப்பை கட்டியை அகற்றியுள்ளனர்.
வயிற்றில் கட்டிகள் 500 கிராம் முதல் 1 கிலோ வரை தான் இருக்கும். அரிதாக சிலருக்கு மட்டுமே இது போன்ற பெரிய கட்டிகள் இருக்கும். பெண்கள் வயிறு சம்பந்தமான பரிசோதனைகளை கட்டாயம் எடுத்துக்கொள்ள வேண்டுமென மருத்துவர் பாண்டியராஜன் அறிவுறுத்தியுள்ளார்.