வேலியில் பிராவை கழற்றி போடும் பெண்கள் - என்ன காரணம்?
பெண்கள் தாங்கள் அணிந்திருக்கும் பிராவை கழட்டி வேலி முழுவதும் தொங்கவிடுகின்றனர். ஏன் அவ்வாறு செய்கிறார்கள் என்பது பற்றி இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.
பிராக்கள் வேலி
சுற்றுலா தலங்களில் ஒவ்வொன்றிற்கும் விநோதமான சடங்குகள், பழக்க வழக்கங்கள் பின்பற்றப்படும். இந்த நிலையில் நியூசிலாந்தில் உள்ள சுற்றுலாதளம் ஒன்றிற்கு செல்லும் பெண்கள் அங்குள்ள வேலியில் தங்களது பிராவை மாட்டிவிடுவது விநோத வழக்கமாக உள்ளது.
நியூசிலாந்தில் கார்ட்ரோனா(cardrona) என்ற சுற்றுலா தளம் ஒன்று உள்ளது. இங்கு பெண்கள் தங்கள் உள்ளாடையான பிராவை வேலியில் போட்டுவிட்டுச் செல்கின்றனர்.
இந்த இடத்தை பிரா வேலி என்றும் அழைக்கின்றனர். இந்த வேலியில் ஆயிரக்கணக்கான பிராக்கள் தொங்கிக் கொண்டிருக்கின்றன.
ஏன் பெண்கள் இந்த வேலியில் பிராக்களை தொங்கவிடுகின்றனர் என்பதற்கு வெவ்வேறு காரணங்களும்,கதைகளும் உள்ளன.இது ட்ரெண்டிங்கிற்கு ஏற்றார் போல மாறுகிறது.
1998 கிறிஸ்துமஸ் மற்றும் 1999 புத்தாண்டுக்கு இடைப்பட்ட நாட்களில் இங்கு வேலியில் 4 பிராக்கள் தொங்கவிடப்பட்டிருந்த நிலையில்,பிப்ரவரி மாதத்தில் அதிகரித்து 60 பிராக்கள் வேலியில் இருந்துள்ளது.
நாட்கள் செல்ல செல்ல பிராக்களின் எண்ணிக்கை என்பது ஆயிரக்கணக்கில் அதிகரித்துக் கொண்டே வருகிறது.
காரணம் என்ன?
பெண்கள் இந்த வேலியில் பிராக்களை கழட்டி போடப்படுவதற்கு காரணமாக தங்களது சுதந்திரத்தை பிரகடனப்படுத்துவதற்காக பிராக்களை கழற்றி வேலியில் தொங்க விடுவதை புகைப்படமாக எடுத்துக் கொள்கிறார்கள்.
மேலும், பெண்களின் மார்பக புற்றுநோய் சிகிச்சை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இவ்வாறு செய்வதாக கூறப்படுகிறது.
சிலருக்கு பிராக்களை கழட்டி வேலியில் போடுவதால் பெண்களுக்கு பிடித்தமான வாழ்க்கை துணை கிடைப்பதாகவும் கூறுகின்றனர்.
இந்த வேலி அமைந்துள்ள இடத்தின் உரிமையாளர்கள் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு வேலைகளை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.