நடனம் ஆடியதால் ஆசிரியை பணியிடை நீக்கம் ; பெருகும் ஆதரவும் எதிர்ப்பும்

egypt work teacher suspended belly dance
By Swetha Subash Jan 13, 2022 10:27 AM GMT
Swetha Subash

Swetha Subash

in உலகம்
Report

பெல்லி நடனம் ஆடியதால் எகிப்தில் ஆசிரியை ஒருவர் பணி நீக்கம் செய்யப்பட்டது அந்நாட்டில் சர்ச்சையை உருவாக்கியுள்ளது.

எகிப்தில் ஆயா யூசெப் என்ற பெண் ஆசிரியையாக பணியாற்றிவருகிறார். இவர் தனது சக ஊழியர்களுடன் நைல் நதியில் ஒரு படகில் நடனமாடும்போது அவர்களில் ஒருவர் அதை வீடியோவாக எடுத்தார்.

அதனை ஏற்காத ஆயா யூசெப், தன் அனுமதியின்றி சக ஊழியர் படம் எடுத்ததாக குற்றஞ்சாட்டினார். அந்த வீடியோவில், யூசெப், தலையில் முக்காடு மற்றும் நீண்ட கை உடையணிந்து, ஆண்களுக்கு மத்தியில் நடனமாடியதாக கூறப்படுகிறது.

இந்தச் சூழலில் நடனம் ஆடியதற்காக அந்த ஆசிரியை பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். ஆசிரியை பணிநீக்கம் செய்யப்பட்டதற்கு அந்நாட்டில் கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.

இதுகுறித்து ஒருவர் கூறுகையில், இது நாம் வாழும் மோசமான காலத்தை தெளிவாக வெளிப்படுத்துகிறது என்றார்.

இதற்கிடையே பொது விழாவிலோ அல்லது தனது மாணவர்கள் முன்னிலையிலோ தான் நடனமாடவில்லை என்று யூசுப் பத்திரிகையாளர்களிடம் கூறினார்.

ஆசிரியை பணியில் இருந்து நீக்கப்பட்டதை அடுத்து, எகிப்தில் உள்ள பெண்கள் உரிமை ஆர்வலர்கள் அவருக்கு ஆதரவாக குரல் எழுப்பியுள்ளனர்.

அதுமட்டுமின்றி மற்ற பெண்கள் யூசுப்பை ஆதரிப்பதற்காக தங்கள் நடனத்தையும் சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர்.

மேலும், அனுமதியின்றி தன்னைப் படம்பிடித்து, அந்த வீடியோவை சமூக ஊடகங்களில் பகிர்வது தனது தனியுரிமையை மீறுவதாகவும், அதற்கு காரணமான நபர் மீது வழக்குத் தொடர திட்டமிட்டுள்ளதாகவும் ஆசிரியை கூறியுள்ளார்.