என் காதலன் சந்தோசமா இருக்கனும்... சூனியம் வைக்க ரூ.5 கோடியை ஆட்டையப்போட்ட பெண்!
பெண் ஒருவர் தனது காதலன் மகிழ்ச்சிக்காக ரூ.5 கோடியை திருடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெண் செய்த காரியம்
வடகிழக்கு சீனாவில் உள்ள லியோனிங் என்ற மாகாணத்தைச் சேர்ந்த வாங் என்ற குடும்பப்பெயர் கொண்ட புத்தகக் காப்பாளர். இவர் தனது முதலாளியின் அலுவலகத்தில் இருந்து சுமார் ரூ.5 கோடி (5,54,21,589.50 ரூபாய்) பணத்தை திருடி உள்ளார். இதனை கண்டுபிடித்து, காவல்துறையினரால் கைது செய்துள்ளனர், இது குறித்து சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
விசாரணையில், அவர் கடந்த 2018-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்தே நிறுவனத்தின் பணத்தை திருட தொடங்கியதாக கூறப்படுகிறது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் வரை நிறுவனத்தின் கணக்கில் அசாதாரணமான எதையும் கவனிக்கவில்லை. அதன்பின்னர் தனது நிறுவனத்தில் ஏதோ தவறு நடப்பதை கண்டறிந்த அவர் இதுகுறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
சூனியம்
இந்நிலையில், புகாரின் பேரில் விசாரித்த போலீசார் அவர் திருடப்பட்ட பணத்தில் வாங்கிய ஏராளமான டிசைனர் பைகள் மற்றும் துணிகளை அதிகாரிகள் கைப்பற்றினர். மேலும், இவர் ஆன்லைனில் ஜோசியம் மற்றும் ஜாதக விளம்பரங்கள் மூலம் ஈர்க்கப்பட்டுள்ளனர், இவர் தனது விருப்பங்களை நிறைவேற்ற மத சடங்குகளை நம்ப தொடங்கியதாகவும் தெரிவித்துள்ளனர்.
அதனால் தான் சூனியம் செய்ததாகவும், அது தனக்கு நல்ல அதிர்ஷ்டத்தைத் தந்ததாகவும் அலுவலகப் பணத்தை முறையற்ற முறையில் செலவழித்ததற்காக கைது செய்யப்பட்டார்.