கருக்கலைப்பு மாத்திரைகளை திடீரென வாங்கி குவிக்கும் பெண்கள் - என்ன காரணம்?

Donald Trump United States of America Abortion
By Sumathi Nov 13, 2024 09:00 AM GMT
Report

அமெரிக்காவில் கருத்தடை மாத்திரைகளின் விற்பனை அதிகரித்துள்ளது.

டிரம்ப் வெற்றி

அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார். 47வது அதிபராக அடுத்தாண்டு தொடக்கத்தில் பதவியேற்கவுள்ளார். தொடர்ந்து அந்நாட்டில் வினோத சம்பவங்கள் நடைபெற்று வருகிறது.

abortion pills

அந்த வகையில், டிரம்ப்பிற்கு அதிகளவில் வாக்களித்து வெல்ல வைத்த ஆண்களுடன் இனி உடலுறவு கொள்ள மாட்டோம் என பெண்கள் போராட்டத்தை அறிவித்தனர். சில பெண்கள் டிரம்ப் வெல்லக் காரணமாக இருந்த ஆண்களை எல்லாம் விஷம் வைத்துக் கொல்லப் போகிறோம் என்றும் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.

டிரம்ப் வெற்றி; ஆண்களுக்கு விஷம், போராடும் பெண்கள் - பரபரப்பு சம்பவம்!

டிரம்ப் வெற்றி; ஆண்களுக்கு விஷம், போராடும் பெண்கள் - பரபரப்பு சம்பவம்!

விற்பனை உயர்வு

இந்நிலையில், அங்குள்ள பெண்கள் திடீரென ஹார்மோன் கருத்தடைகள் மாத்திரைகள், கருக்கலைப்பு மருந்துகளை வாங்கி குவித்து வருகின்றனர். பிரபல கருக்கலைப்பு மாத்திரை விற்பனையாளரான எய்ட் அக்சஸ் என்ற நிறுவனம், டிரம்ப் வென்றவுடன் மட்டும் கருத்தடை மாத்திரைகளின் விற்பனை வழக்கத்தை விட சுமார் 17 மடங்கு அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது.

donald trump

மேலும், கருக்கலைப்பு மற்றும் அதற்கான மாத்திரைகள் குறித்த தகவல்களைப் பகிரும் பிளான் சி இணையதளத்திற்கு வருவோரின் எண்ணிக்கையும் சுமார் 20 மடங்கு அதிகரித்துள்ளது.

இந்த திடீர் ஏற்றம் எதற்கென்றால், முன்னதாக உச்ச நீதிமன்றம், கருக்கலைப்பு என்பது நாடு தழுவிய பெடரல் உரிமை இல்லை என்று கடந்த 2022ல் தீர்ப்பளித்தது. அதனையடுத்து டிரம்ப்பின் குடியரசு கட்சி ஆட்சியில் இருக்கும் மாகாணங்களில் கருக்கலைப்பிற்குத் தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.