முதலிரவில் கன்னித்தன்மை.. கட்டாயப்படுத்தப்பட்ட பெண் - மாமியார் கொடுமை!
கன்னித்தன்மையை நிரூபிக்க மருமகள் கட்டாயப்படுத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கன்னித்தன்மை
ராஜஸ்தான் மாநிலம் பில்வாரா மாவட்டத்தைச் சேர்ந்தவர் 24 வயது பெண். இவருக்கு கடந்த மே மாதம் திருமணம் நடந்துள்ளது. முதலிரவில் கன்னித்தன்மை நிரூபிக்கப்படவில்லை. அதனைத் தொடர்ந்து அவருக்கு கன்னித்தன்மை பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.
அப்போது அவரது கன்னித்திரை ஏற்கெனவே கிழிந்திருப்பதை அறிந்தனர். இதனை அறிந்த மாப்பிள்ளை வீட்டார் சண்டையிட்டுள்ளனர். இந்த விவகாரம் ஊர் பஞ்சாயத்திற்கு சென்றுள்ளது. பஞ்சாயத்தில், ரூ.10 லட்சம் நஷ்ட ஈடாக பெண் வீட்டாருக்கு விதிக்கப்பட்டது.
மாப்பிள்ளை வீட்டார் கொடுமை
அந்தப் பெண் வீட்டார் இது குறித்து போலீஸில் புகார் அளித்தனர். மணப்பெண் தன்னை ஒருவர் ஓராண்டுக்கு முன்னர் பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் அது குறித்து போலீஸில் புகார் கொடுத்திருக்கிறேன்.
இந்த சம்பவத்தை அறிந்திருந்தும் மணமகன் வீட்டார் ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார். மேலும், அப்பெண்ணை அவரது கணவரும், மாமியார் மற்றும் குடும்பத்தினரும் அடித்துத் துன்புறுத்தியுள்ளனர்.
பெண் வேதனை
இதனையடுத்தே அந்தப் பெண் தான் அனுபவித்துவரும் அவலங்கள் குறித்து ஒரு வீடியோவாகப் பதிவு செய்து வெளியிட்டுள்ளார் என்று காவல் கண்காணிப்பாளர் சுரேந்திர குமார் தெரிவித்துள்ளார்.
அதன் அடிப்படையில் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் தற்போதைய காலக்கட்டத்தில் நிகழ்ந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.