ஆணுறையில் துளையிட்ட பெண்... ஆசைப்பட்டவருடன் வாழ்வதற்கு எடுத்த விபரீத முடிவு

By Petchi Avudaiappan May 06, 2022 11:07 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in ஜெர்மனி
Report

ஜெர்மனியில் தன்னுடன் உடலுறவு கொண்ட ஆணின் ஆணுறைகளை வேண்டுமென்றே சேதப்படுத்தியதற்காக பெண் ஒருவருக்கு சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

மேற்கு ஜெர்மனில் உள்ள புகழ்பெற்ற நகரமான ப்யல்பெல்ட்டில் வசித்து வரும் 42 வயதான ஆணுடன், 39 வயது பெண் ஒருவர் திருமணம் செய்யாமல் பிரெண்ட்ஸ் வித் பெனிபிட்ஸ் என்ற உறவில் இருந்துள்ளார். அப்படியென்றால் உடல் தேவைகளுக்காக ஆண் பெண் நண்பர்களாக இணைந்து வாழ்வதாகும். 

அந்த இருவரும் 2021ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ஆன்லைனில் சந்தித்த நிலையில் பின்னர் ஒன்றாக இனைந்து வாழ தொடங்கியதாக கூறப்படுகிறது. அந்த நபர் மீது காதலில் விழுந்த அப்பெண் திருமணம் செய்ய விரும்பியுள்ளார். ஆனால் திருமணம் செய்யவோ, தொடர்ந்து அந்த பெண்ணுடன் உறுதியான உறவில் இருக்க விரும்பவில்லை என தெரிவித்துள்ளார். 

இதனால் தங்களுக்கு ஒரு குழந்தை பிறந்தால் எல்லாம் சரி ஆகிவிடும் என அந்த பெண் நினைத்துள்ளார். அதனைத் தொடர்ந்து தனது காதலன் உடலுறவின் போது பயன்படுத்துவதற்காக வைத்திருந்த ஆணுறைகளில் ரகசியமாக ஓட்டை போட்டுள்ளார். ஆணுறையில் ஓட்டை போட்டால் தான் கர்ப்பம் ஆகி குழந்தை பிறக்கும். அவ்வாறு நடந்தால் அந்த நபர் தன்னுடன் வாழ்வார் என அப்பெண் நினைத்துள்ளார். 

இதனிடையே தனது காதலனுக்கு வாட்ஸ்அப்பில் மெசேஜ் அனுப்பிய அப்பெண் தான் கர்ப்பமாக இருப்பதாவும், ஆணுறைகளில் வேண்டுமென்றே  ஓட்டை போட்டதாக கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த காதலன் அப்பெண் தன்னை ஏமாற்றி விட்டதாகவும், தனக்கு உண்மையாக இல்லாமல் மோசடி செய்ததால் கடும் தண்டனை வழங்க வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். 

தனது தவறை நீதிமன்றத்தில் ஒப்புக் கொண்ட நிலையில், வழக்கறிஞர்களுக்கும் நீதிபதிகளுக்கும் எந்த பிரிவின் கீழ் குற்றச்சாட்டுகளுக்கு அப்பெண்ணுக்கு தண்டனை விதிக்க வேண்டும் என்று உறுதியாக தெரியவில்லை. அதன்பின் தனது காதலனை ஏமாற்றும் விதமாக திருட்டுத்தனமான செயலை புரிந்த குற்றத்திற்காக பெண்ணுக்கு ஆறு மாத சிறை தண்டனை வழங்கி நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். மேலும் இது ஒருவகையில் பாலியல் வன்கொடுமை என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.