ஸ்டாலின் முதல்வரானால் நாக்கை அறுத்து உண்டியல் போடுகிறேன். நேர்த்திக்கடனை நிறைவேற்றிய பெண்ணால் பரபரப்பு
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள பொதுவகுடியைச் சேர்ந்த கார்த்திக் மனைவி வனிதா (32).
இவர் சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்று மு.க ஸ்டாலின் முதல்வரானால் தனது நாக்கை அறுத்து முத்தாலம்மன் கோவில் உண்டியலில் போடுவதாக வேண்டியுள்ளார்.
அதன்படி நடைபெற்ற தேர்தலில் திமுக வெற்றிபெற்று ஸ்டாலின் முதலமைச்சராகப்போவதால் நேர்த்திக்கடனை நிறைவேற்ற வனிதா இன்று காலை பரமக்குடி முத்தாலம்மன் கோவிலுக்கு வந்துள்ளார்.
கோவில் திறக்கப்படாததால் கோவில் வாசல் முன்பு நின்று தனது நாக்கினை கத்தியால் அறுத்துக்கொண்டார்.
நாக்கினை கோவில்வாசல் படியில் வைத்துவிட்டு ரத்தவெள்ளத்தில் கிடந்தார். பின் பொதுமக்கள் மீட்டு பரமக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அனுப்பி வைத்தனர்.