குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 வழங்கும் திட்டம் - தமிழக அரசு திடீர் முடிவு..!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.
சட்டப்பேரவை கூட்டத்தொடர்
தமிழக சட்டப்பேரவையில் 2023 - 2024 ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையை வரும் மார்ச் 20-ம் தேதி காலை 10 மணிக்கு, நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்ய உள்ளார்.
மார்ச் 28-ம் தேதி, 2023-24-ம் ஆண்டுக்கான முன்பண மானியக் கோரிக்கை மற்றும் 2022-23-ம் ஆண்டுக்கான இறுதி கூடுதல் மானியக் கோரிக்கை ஆகியவற்றையும் நிதியமைச்சர் தாக்கல் செய்கிறார்.
அமைச்சரவையில் ஒப்புதல்
தமிழக நிதிநிலை அறிக்கையில், குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1,000 உரிமைத் தொகை வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட உள்ளது.
இதுதவிர, பல்வேறு புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட உள்ளன. பழைய திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்பட உள்ளது. இந்த திட்டங்களுக்கு நேற்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.