இறுதிச்சடங்கு நடத்தி உடல் தகனம்: 27 மாதங்கள் கழித்து வீடு திரும்பிய சிவானி

Uttar Pradesh
By Fathima Sep 07, 2026 07:20 AM GMT
Report

இந்தியாவில் இறந்துவிட்டதாக கருதி குடும்பத்தினரால் இறுதிச்சடங்கு செய்யப்பட்ட நிலையில் 27 மாதங்கள் கழித்து அப்பெண் உயிருடன் மீண்டும் வந்த சம்பவம் நடந்துள்ளது.

உத்தரபிரதேசத்தின் நவிகோட் நந்தனா கிராமத்தை சேர்ந்த பெண் சிவானி(வயது 28), கடந்த 2024ம் ஆண்டு மே மாதம் முதல் அவரை காணவில்லை.

குடும்பத்தினர் தேடி அலைந்த நிலையில் ஜூலை மாதம் அழுகிய நிலையில் பெண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.

அப்பெண்ணின் அடையாளங்களின் அடிப்படையில் இறந்தது சிவானி என கருதிய குடும்பத்தினர் அவரது உடலுக்கு இறுதி மரியாதை செய்து தகனம் செய்தனர்.

மேலும் வரதட்சணை கொடுமையே தன் மகள் இறப்புக்கு காரணம் என கருதிய சிவானியின் பெற்றோர் மாப்பிள்ளை வீட்டார் மீது வரதட்சணை வழக்கு பதிவு செய்தனர்.

இந்நிலையில் தற்போது 27 மாதங்கள் கழித்து மீண்டும் வீடு திரும்பியுள்ளார் சிவானி, இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் யாருடைய உடலுக்கு இறுதிச்சடங்கு செய்தனர் என கேள்வி எழுந்துள்ளது.

இதுகுறித்தான விசாரணையை போலிசார் மீண்டும் தொடங்கியுள்ளனர்.

இறுதிச்சடங்கு நடத்தி உடல் தகனம்: 27 மாதங்கள் கழித்து வீடு திரும்பிய சிவானி | Women Returns Home After 27 Months