அதிகாரி திட்டியதால் விஷம் அருந்திய பெண் காவலர் - மருத்துவமனையில் அனுமதி!
Police
Women
Poison
Drink
மருத்துவமனை
பெண்
காவல்துறை
By Thahir
3 years ago
உயர் அதிகாரி ஒருவர் திட்டியதால் பெண் காவலர் ஒருவர் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தாம்பரம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் தலைமைக் காவலராக பணியாற்றி வருபவர் செண்பகம். 35 வயதான இவர் திடீரென்று நேற்று காவல் நிலையத்திலேயே விஷம் அருந்தி தற்கொதலைக்கு முயன்றுள்ளார்.
இதனைக் கண்ட சக பெண் காவலர்கள் செண்பகத்தை மீட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதற்கு காரணம் அதே காவல்நிலையத்தைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் திட்டியதால் செண்பகம் தற்கொலைக்கு முயற்சித்ததாக கூறப்படுகிறது.
இச்சம்பவம் தொடர்பாக உயர் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.