பெண்கள் மட்டுமே இயக்கும் ரேபிடோ பைக் சேவை தொடக்கம் : மகிழ்ச்சியில் மகளிர்
By Irumporai
சென்னை, நந்தனம் மெட்ரோ ரயில் நிலையத்தில் பெண்கள் மட்டுமே இயக்கும் ரேபிடோ பைக் சேவை தொடக்கப்பட்டுள்ளது.
ரேபிடோ சேவை
ரேபிடோ பைக் சேவை மூலம் குறைந்த கட்டணத்தில் பைக்கில் பயணிகள் பயணம் செய்யலாம், அந்த வகையில் சென்னை , நந்தனம், மெட்ரோ ரயில் நிலையத்தில் பெண்கள் மட்டுமே இயக்கும் ரேபிட்டோ பைக் சேவை தொடங்கப்பட்டுள்ளது
பெண்கள் மட்டும்
இந்த சேவையை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் இயக்குநர் ராஜேஷ் சதுர்வேதி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
முதற்கட்டமாக ஆயிரம் விளக்கு, தேனாம்பேட்டை, எழும்பூர், சைதாப்பேட்டை, அரசினர் தோட்டம் மெட்ரோ ரயில் நிலையங்களில்இந்த சேவை தொடங்கப்பட்டுள்ளது.