திருமணம் செய்ய மறுத்த இளம் பெண்ணை கல்லால் அடித்துக் கொலை செய்ய முயன்ற இளைஞர்..!

Tamil nadu Tamil Nadu Police
By Thahir May 26, 2022 05:20 PM GMT
Report

திருமணம் செய்ய மறுத்த இளம்பெண்ணை கல்லால் அடித்துக் கொலை செய்ய முயன்ற இளைஞரை காவல்துறையினர் கைது செய்தனர்.

கடலுார் மாவட்டத்தில் உள்ள விருத்தாச்சலம் அருகே உள்ள கார்மாங்குடி பகுதியில் வசித்து வருபவர் ஸ்ரீதர்.இவர் குறிஞ்சிப்பாடியை சேர்ந்த இளம்பெண்ணுடன் பழகி வந்ததாக கூறப்படுகிறது.

திருமணம் செய்ய மறுத்த இளம் பெண்ணை கல்லால் அடித்துக் கொலை செய்ய முயன்ற இளைஞர்..! | Women Not Accept Marriage To Try Attempt Yongster

இந்த நிலையில் திருமணம் செய்து கொள்ளுமாறு ஸ்ரீதர் விருப்பம் தெரிவித்தபோது, இளம்பெண் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.

திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்ததால் ஆவேசமடைந்த ஸ்ரீதர், பெண்ணை தனியாக பேச வேண்டும் எனக் கூறி வெள்ளாற்றங்கரைக்கு அழைத்து சென்று மறைத்து வைத்திருந்த சுத்தியல் மற்றும் கற்களால் கொடூரமாக தாக்கியுள்ளார்.

அப்போது விவசாயி ஒருவர் வருவதை கண்ட ஶ்ரீதர் அங்கிருந்து தப்பியோடிய நிலையில், இளம்பெண் அலறியதால் அவரை மீட்ட விவசாயி மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்.

பின் இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் ஸ்ரீதரை நெய்வேலியில் வைத்து கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.