காதலியை துண்டு துண்டாக வெட்டி, முக தோலை பிளேடால் உரித்த கொடூர காதலன்
குஜராத் மாநிலத்தில் காதலித்த பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக கூறி காதலியை கொலை செய்து உடலை துண்டு துண்டாக வெட்டிய காதலை போலீசார் கைது செய்தனர்.
சூரத் பகுதியை சேர்ந்த வினை ராவ் (38), இவருக்கு ஏற்கனவே திருமணமாகி குழந்தைகள் இருக்கும் நிலையில் , அதை மறைத்து அதே பகுதியை சேர்ந்த சீதா பகத் (22),என்பவரை காதலித்து அடிக்கடி தனிமையில் உல்லாச வாழ்கையில் இருந்துள்ளார்.
சில நாட்களில் சீதா தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கட்டாயப்படுத்திய நிலையில்,கோவமடைந்த வினய் திருமணம் செய்து கொல்வதாக கூறி , அந்த பெண்ணை அழைத்து கொண்டு மகாராஷ்டிரா சென்றுள்ளார்.
ஒரு பக்கம் திருமண வேலை செய்வது போல நாடகமாடி, சீதாவை ஆள் நடமாட்டமே இல்லாத காட்டு பகுதிக்கு அழைத்து சென்று சீதாவின் கழுத்தை அறுத்து கொன்றுள்ளான்.
போலீசுக்கு அடையாளம் தெரிய கூடாது என்று உடலை துண்டு துண்டாக வெட்டி உள்ளான் . மேலும் முகத்தை பிளேடு எடுத்து தோலை தனியே கிழித்துள்ளான். அதன் பிறகு கற்களை எடுத்து முகத்தை சிதைத்து இருக்கிறான்.
அனைத்தையும் முடித்துவிட்டு வழக்கம் போல வேளைக்கு சென்றுள்ளான். இதன் நடுவே ரயில்வே தண்டவாளத்தில் துண்டு துண்டாக உடல் கிடப்பதை அறிந்த போலீசார் உடல் பாகங்களை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
ரயில்வே நிலையத்தில் உள்ள சிசி டிவி கேமராவை ஆய்வு செய்தபோது வாலிபர் ஒருவர் அப்பெண்ணுடன் செல்லும் காட்சி பதிவானது இதையடுத்து கொலையாளியை தேடிய போலீசார் அவரை கைது செய்தனர்.