சாக்லேட் என நினைத்து பட்டாசை கடித்த பெண் - இறுதியில் நேர்ந்த சோகம்
பெண் ஒருவர் சாக்லேட் என நினைத்து பட்டாசை கடித்ததில் வாயில் பட்டாசு வெடித்துள்ளது.
ஸ்நாக்ஸ்
சீனாவின் செங்டு பகுதியில் WU என்ற பெண் வசித்து வருகிறார். சில நாட்களுக்கு முன் இந்த பெண் தனது வீட்டில் மங்கலான அறையில் அமர்ந்து டிவி பார்த்து கொண்டு இருந்துள்ளார்.
அப்போது அவரது இளைய சகோதரன், ஸ்நாக்ஸ் மற்றும் பட்டாசுகளை வாங்கி வந்து அந்த பெண்ணின் அருகே வைத்துள்ளார்.
பட்டாசை கடித்த பெண்
அவர் சின்ன வயதில் இருந்து விரும்பி சாப்பிடும் சாக்லேட் போல், அந்த பட்டாசு பேக் செய்யப்பட்டிருந்தது. டிவியில் மூழ்கியிருந்த அந்த பெண், சாக்லேட் என நினைத்து பட்டாசை எடுத்து கடித்துள்ளார். உடனே பட்டாசு அவரது வாயில் வெடித்துள்ளது.
இதில் அவரது வாய் சிறிது நேரம் மரத்து விட்டதாகவும், வெடி மருந்தின் சுவையை உணர முடிந்தாகவும் தெரிவித்துள்ளார். இதில் அவருக்கு வாயில் சிறிய அளவிலான ரத்த காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.