கல்யாணத்திற்கு வந்த கணவரின் நண்பர் - காதலில் விழுந்த மனைவி விவாகரத்து!
திருமணத்திற்கு விருந்தினராக வந்த நபர் ஒருவரையே பெண் திருமணம் செய்துள்ளார்.
திருமணம்
பிரிட்டனைச் சேர்ந்தவர் கெர்ரி ஸ்விண்டன். இவருக்கு 2011 இல் திருமணம் நடைபெற்றது. அதற்கு 110 விருந்தினர்கள் அழைக்கப்பட்டனர். திருமணம் நடந்த நான்கு ஆண்டுகள் ஆன பிறகு கெர்ரிக்கு அவரது கணவருக்கும் விவாகரத்து ஆகியுள்ளது.

அதன்பின், தனது மகளுடன் தனியாக வாழ்ந்து வந்துள்ளார். அப்போது அவர் வாங்கிய பியானோ ஒன்றை தனது வீட்டிற்கு கொண்டு செல்ல வாகனம் ஒன்றை இணையம் வழியாக புக் செய்துள்ளார். அதில் டிரைவராக வந்தவர் தான் இவரது திருமணத்திற்கு வந்த விருந்தினர்களில் ஒருவரான மார்க் டெய்லர்.
விருந்தாளியுடன் காதல்
அதனையடுத்து தான் கெர்ரி தனது நீண்டகால நண்பரின் மனைவி என்பது அவருக்கு தெரியவந்துள்ளது. தொடர்ந்து இருவரும் அடிக்கடி பேசி வந்துள்ளனர். அதில் தான் இப்போது தனியாக வாழ்ந்து வருவதாக கெர்ரி தெரிவித்துள்ளார். மேலும் இதுகுறித்து கெர்ரி தெரிவிக்கையில், ஒரு நாள் அவர் திடீரென்று ஒரு பூங்கொத்துடன் வந்து என்னை டேட்டிங் அழைத்தார். என்னால் மறுக்க முடியவில்லை.

அதன் பிறகு நாங்கள் இருவரும் ஒன்றாகிவிட்டோம். மார்க் பாலிசிஸ்டிக் கிட்னி எனப்படும் மரபணு நோயால் பாதிக்கப்பட்டார். அவரது சிறுநீரகம் செயலிழந்தது. தனது சிறுநீரகத்தை கொடுத்தேன். மருத்துவர்கள் அதனை வெற்றிகரமாக அவருக்குப் பொருத்தினர். தற்போது இருவரும் மகிழ்ச்சியாக ஒன்றாக வாழ்ந்து வருவதாக கூறினார்.