திருமணமான காதலனை கடத்திய முன்னாள் காதலி, மிரட்டி கட்டாய கல்யாணம் - பகீர் சம்பவம்!
பெண் ஒருவர் தனது திருமணமான காதலனை கடத்தி சென்று கட்டாய திருமணம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காதலனை கடத்திய பெண்
சென்னை வேளச்சேரியை சேர்ந்த மென்பொறியாளர் பார்த்திபன், இவர் கடந்த வியாழக்கிழமை வேலைக்கு சென்றார் அப்பொழுது இவரை அடையாளம் தெரியாத கும்பல் தாக்கி கடத்தி சென்றனர். இது குறித்து அந்த என்ஜினீயரின் மனைவி போலீசில் புகாரளித்தார்.
இந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து போலீசார் அந்த கடத்தப்பட்ட வாகன எண்ணை வைத்து தேடினர். அதில் பார்த்திபனை காரில் கடத்தியது அவரது முன்னாள் காதலி செளந்தர்யா என்பது தெரியவந்தது. மேலும் செல்போன் சிக்னலை வைத்து காஞ்சிபுரத்தில் பதுங்கியிருந்த அந்த கும்பலை போலீசார் மடக்கி பிடித்தனர்.
விசாரணை
இந்நிலையில், பார்த்திபனை கடத்திய முன்னாள் காதலி ராணிப்பேட்டை மாவட்டம், கலவை கிராமத்தைச் சேர்ந்த 27-வயதான சௌந்தர்யா என்பது தெரியவந்தது. அவரது தாய் உமா, தாய்மாமன் மகன் ரமேஷ், சித்தப்பா சிவகுமார் ஆகியோர் இந்த கடத்தலில் ஈடுபட்டுள்ளனர்.
அவரை கடத்தி சென்று அந்த முன்னாள் காதலில் கட்டாய திருமணம் செய்ததாக தெரியவந்தது. பார்த்திபன் - செளந்தர்யா ஆகிய இருதரப்பினரின் வேண்டுகோளை ஏற்று காவல்துறையினர் மேல்நடவடிக்கையை கைவிட்டனர். பின்னர் இவர்களது திருமணம் செல்லாது என்று கூறி இருதரப்பினரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.