10 ஆண்கள் துஷ்பிரயோகம் செய்ததாக பொய் புகார் - பெண்ணுக்கு சிறைத்தண்டனை
10 ஆண்கள் துஷ்பிரயோகம் செய்ததாக பொய் புகார் அளித்த பெண்ணுக்கு நான்கரை ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பொய் புகார் அளித்த பெண்
பிரித்தானியாவின் போல்டனில் உள்ள ஃபார்ன்வொர்த்தைச் சேர்ந்த 31 வயதான ஸ்டேசி ஷார்ப்பிள்ஸ் என்ற பெண், டேட்டிங் செயலிகள் வாயிலாக பல்வேறு ஆண்களுடன் பழகியுள்ளார்.

அதன் பின்னர், அந்த நபர்கள் மீது துஷ்பிரயோகம் செய்ததாக புகார் அளித்துள்ளார். இதே போல், 2013 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரை பல ஆண்கள் மீது துஷ்பிரயோகம் செய்ததாக புகார் அளித்துள்ளார்.
2013 ஆம் ஆண்டு மான்செஸ்டரின் ஃபெயில்ஸ்வொர்த்தில் உள்ள ஒரு நூலகத்திற்குப் பின்னால் 9ஆண்களால் தான் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக புகார் அளித்துள்ளார்.
அவர் புகார் அளித்த நபர்களை கைது செய்த காவல்துறையினர், அவர்களிடம் தீவிர விசாரணை மற்றும் பரிசோதனை நடத்தியுள்ளனர்.
ஆனால், ஸ்டேசி அளித்த புகாரும் இந்த ஆண்களின் வாக்குமூலமும் ஒன்றாக பொருந்தாததால், ஸ்டேசியிடம் இது குறித்து விசாரணை நடத்திய போது தான் பொய் கூறியதாக ஒப்புக்கொண்டுள்ளார்.
நான்கரை ஆண்டுகள் சிறை தண்டனை
இதனையடுத்து அவருக்கு நான்கரை ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து போல்டன் கிரவுன் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
ஸ்டேசி கூறிய குற்றச்சாட்டுகள் காரணமாக பாதிக்கப்பட்ட ஆண்களை அவர்களின் குடும்பத்தினர் ஒதுக்கி வைத்துள்ளார். அவர்களின் வேலை பறிபோயுள்ளது. மனதளவில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஆண்கள் இந்த பாதிப்புகளை எதிர்கொள்வார்கள் என தெரிந்தும் ஸ்டேசி குற்றச்சாட்டுகள் வைத்துள்ளதாக தெரிய வந்துள்ளது.