இரவில் வலுக்கட்டாயமாக படுக்கைக்கு வர சொல்வார்கள் : ரஷ்ய ராணுவத்தில் பாலியல் வன்கொடுமை : பகீர் தகவல்
ரஷ்யா தனது ராணுவத்தில் பெண் மருத்துவர்களை பாலியல் அடிமைகளாக பயன்படுத்துவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
ரஷ்யா
ரஷ்ய ராணுவத்தில் முதல் பெண் மருத்துவராக பணியாற்றிய வீராங்கனை மார்கரிட்டா இவர் பிரபல ஊடகம் ஒன்றுக்கு அதிர்ச்சி பேட்டியளித்துள்ளார். அதில் அவரது பிரிவில் பணியாற்றிய சக பெண் மருத்துவர்கள் களத்தில் மனைவிகளாக பயன்படுத்தப்பட்டு வந்து உள்ளனர்.
இதன்படி, அந்த பெண்கள் உயர் பதவி வகிக்கும் அதிகாரிகளுக்கு சமையல் செய்வது, தூய்மை செய்வது போன்ற பணிகளை செய்வதுடன், பாலியல் ரீதியாகவும் பணிவிடை செய்ய வேண்டும் என கூறியுள்ளார்.
அப்படி அவரையும் பயன்படுத்த சில அதிகாரிகள் முயன்று உள்ளனர். கர்னல் அதிகாரி ஒருவருக்கு அவரை அப்படி கள மனைவியாக செயல்பட கேட்டு உள்ளனர். ஆனால் மார்கரிட்டா மறுத்து விட்டார்.
பாலியல்வன் கொடுமை
இதன் விளைவாக அவரை கடுமையாக தண்டிக்கும்படி தளபதிகள் உத்தரவிட்டு உள்ளனர். இதன் எதிரொலியாக, ஒரு மாதத்திற்கு மார்கரிட்டா வெளியே தங்கி உள்ளார். பிற பெண்கள் இரவில் கூடாரங்களிலும், வீடுகளிலும் தங்கி உள்ளனர்.
ஆனால், நான் தரையில் படுத்தேன், சாலையோரம் மற்றும் ஒரு சிறிய காட்டு பகுதியில் இரவில் படுத்தேன். அப்படி செய்யும்போது, கர்னலுடன் படுக்க ஒப்பு கொள்வேன் என்பதற்காக, என்னை சோர்வடைய செய்ய அவர்கள் முயற்சித்தனர் என கூறுகிறார். அந்த படை பிரிவில் உள்ள தளபதிகளுடன் 7 பெண்களை இதுபோன்று சேர்க்க முயன்ற சம்பவங்களையும் நான் பார்த்தேன்.
இதுபோன்று ஒரு பெண், பின்னர், குடிபோதையில் அவரை அதிகாரி ஒருவர் துப்பாக்கியால் சுட்டு விட்டார். பின்னர், உக்ரைன் படையினர் அப்படி செய்து விட்டனர் என வெளியுலகிற்கு காட்டுவதற்கான ஏற்பாடுகளையும் செய்து விட்டனர் என அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்

இந்த தேதியில் பிறந்த பெண்கள் அதிர்ஷ்டசாலிகளாம்.. கணவருக்கு தான் லக்- எண்கணிதம் சொல்வது என்ன? Manithan

இந்தியா - பாகிஸ்தான் போர் நிறுத்தம் : அமெரிக்க ஜனாதிபதி சொன்ன புதிய தகவல்(வைரலாகும் காணொளி) IBC Tamil
