சிங்கிளா இருப்பதே சிறந்தது - திருமணத்தை கண்டு தெறித்து ஓடும் பெண்கள்!
பெண்கள், தனியாகவும், திருமணமாகாமலும் வாழ்வதை எளிதாக நினைப்பதாக புதிய ஆய்வுகள் தெரிவிக்கிறது.
பெண்கள்
Bumble என்ற டேட்டிங் செயலி நிறுவனம் நடத்திய ஆய்வில் பல தகவல்கள் தெரியவந்துள்ளது. அதில், இந்திய பெண்களை வைத்து கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டது. 5ல் 2 பேருக்கு, திருமண சீசனின் போது, தங்கள் குடும்பத்தினர் கல்யாணம் செய்துகொள்ள அழுத்தம் கொடுப்பதாக தெரிவித்துள்ளனர்.

திருமணம் செய்துகொள்ளவும், ஒரு கமிட்டட் ரிலேஷன்ஷிப்புக்குள் போக அவர்கள் வற்புறுத்தப்படுவதாக 33 சதவீத பெண்கள் கூறியுள்ளனர். காதலித்து வரும் பெண்களுக்கு கூட திருமண அழுத்தம் இருக்கிறதாம்.
புதிய தகவல்
மேலும், 81 சதவீத பெண்கள் தங்களுக்கு திருமணமாகாமல் இருப்பது, தனியாக இருப்பது தான் நிம்மதியாக இருக்கிறது என்று தெரிவித்துள்ளனர். அவர்களது உணர்வுகளுக்கு மதிப்பளித்து, அவர்களுக்கான நேரத்தையும் இடத்தையும் அளித்து,

அவர்களின் சிந்தனைக்கும், திறனுக்கும் மதிப்பளிக்கும் ஒரு துணையை அவர்கள் சந்திக்கும்வரை காத்திருக்க தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளனர்.